பெட்ரோல், டீசல் விலை உயர்விலிருந்து தப்பிக்க இந்திய அரசுக்கு ஓர் யோசனை!

வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலையால் பொருளாதாரம் ஒரு சவாலைச் சந்தித்துள்ள நிலையில், மாற்று எரிசக்திக்கு மாறுவதன் மூலம் பெட்ரோல், டீசலின் தேவையைக் குறைக்க முடியும் சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.

எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளன. 4 சக்கர வாகனங்கள், சரக்குந்துகள் மற்றும் தொழிற்சாலைகளில் பூகோள எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் சர்வதேச எரிசக்தி முகமையின் அதிகாரி பெட்டி பிரோல்.

விலை அதிகரிப்பு

டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வாரம் அதிகரிக்கப்பட்டது. பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் நுகர்வில் 80 விழுக்காடு இறக்குமதியை நம்பியுள்ளது இந்தியா. இந்தநிலையில் இந்த ஆண்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10% சரிந்துள்ளது.

தேவை அதிகரிக்கும்

அடுத்து வரும் சில மாதங்களில் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை சராசரிக்குச் சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் எண்ணெய் விநியோகம் செய்யும் வெனிசுலாவில் எரிபொருள் உற்பத்தி கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகப் பிரோல் கூறினார்.

உற்பத்தி - பாதிப்பு

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு வரும் மாதங்களில் உற்பத்தியை அதிகரிக்கத் தவறினால்,உலகச் சந்தை பல்வேறு அதிர்வுகளைச் சந்திக்கும். தற்போது பீப்பாயின் விலை 75 டாலர் வரை உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தீர்வுக்கு வழி

எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் கடும் விளைவு உருவாக்கும் என்று கூறியுள்ள பிரோல், பயோ எரிபொருளைப் பயன்படுத்துவதோடு, பெட்ரோல், டீசல் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறையில் பயோ எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்ப முடியும் என்பது அவர் கருத்து.

Have a great day!
Read more...

English Summary

An idea for the government of India to escape petrol and diesel price Hike