ரூபாய் தாள்களை அச்சிட அரசு எவ்வளவு செலவு செய்கிறது? இதற்குத் தான் சீனாவை நாடுகிறாரா மோடி?

பண்டமாற்று நடைமுறைக்குப் பின்னர் அன்றாட வாழ்க்கையில் பணப்பரிவர்த்தனை முக்கியப் பங்கு வகிக்கிறது. பணத்தை அச்சடிக்க எவ்வளவு பணம் செலவாகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

2000 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரையிலான பணத்தாள்களை அச்சிட்டு வெளியிட ஆகும் செலவை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து இந்திய டூடே பெற்று செய்திகளாக வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

அச்சுச் செலவு

புதிய 2000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பணத்தாளை அச்சடிக்க 4.18 காசுகளை இந்திய அரசு செலவு செய்கிறது. 500 ரூபாய் மதிப்புள்ள ஒரு நோட்டை அச்சடிக்க 2.57 காசுகளும், நூறு ரூபாய் தாளை அச்சடிக்க 1.50 காசுகளும் செலவிடுகிறது.

ரூ.10 க்குச் செலவு அதிகம்

10 ரூபாய் பணத்தை அச்சிடுவதற்காக 1.01 காசுகளைச் செலவிடும் இந்திய அரசு, 20 ரூபாய் நோட்டை அச்சடிக்க 1 ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது. 10 ரூபாய் தாளை அச்சடிக்க ஆகும் செலவைவிட 20 ரூபாயை அச்சடிக்க ஆகும் செலவு குறைவாகும்

10 = 50 செலவு

ஆயிரம் தாள்கள் கொண்ட 2000 ரூபாயை அச்சடிக்க 4,180 ரூபாயும், ஆயிரம் 500 ரூபாய் தாள்களை அச்சடிக்க 2570 ரூபாயும் செலவாகிறது. ஆயிரம் 100 ரூபாய் தாள்களுக்கு 1510 ரூபாயும், 50 ரூபாய் தாள்களை அச்சடிக்க 1010 ரூபாயும் ஆகிறது. 10 ரூபாய்க்கும் இதே செலவுதான்.

ரூ.500 ஐ அச்சிட செலவு

செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 ரூபாய் தாளை அச்சிட 3.09 காசுகள் செலவானது. இது புதிய 500 ரூபாய் அச்சிட ஆகும் செலவைவிட 52 காசுகள் அதிகம் ஆகும்.

ரூ.2000 அதிகச் செலவு

பழைய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு நோட்டை அச்சிட 3.54 காசுகள் செலவானது. இது 2000 ரூபாய் தாளை அச்சிட ஆகும் செலவைவிட 64 காசுகள் குறைவாகும்.

ரூ. 200 நோட்டு

அதே நேரம் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட 200 ரூபாய் தாள்களை அச்சிட எவ்வளவு செய்யப்படுகிறது என்ற விவரங்களை அளிக்கவில்லை.

சீனா

நேபாள், வங்க தேசம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்தியாவினை விடச் சீனாவில் ரூபாய் நோட்டுகளைக் குறைந்தவிலை அச்சிட்டு பெறுவதாகவும் அதனால் தான் மோடி அரசும் சீனாவில் ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்து அது திரும்பப் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

How much does it cost to print Indian currency notes?