100 ரூபாயை தொட இருக்கும் பெட்ரோல் விலை.. ஈரானிலிருந்து இறக்குமதி நிறுத்தம்?

அமெரிக்கா- சீனா இடையில் நிகழ்ந்து வரும் வர்த்தகப் போர்கள் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்க, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் என்ன செய்து விடும் என்று தெரிவித்துள்ள இந்தியா, எத்தனை இக்கட்டான சூழலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியில் முக்கியப் பங்காளியாக இருக்கும் ஈரான் மீது, செப்டம்பர் மாதம் முதல் அடுத்தக் கட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதிக்க இருக்கிறது.

அச்சுறுத்தும் புறக்காரணிகள்

ஈரான் மீதான பொருளாதாரத் தடை தவிர வர்த்தக மோதல், அமெரிக்காவின் நாணயக் கொள்கை, எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்டவை இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புறக்காரணிகள் என்று கூறும் நிதி அமைச்சக ஆலோசகர் சஞ்சீல் சன்யால், இதனால் நிகழப்போகும் எதிர்வினையைப் பொறுத்து நடவடிக்கை அமையும் என்றார்,

சமாளிக்க நடவடிக்கை

சூழ்நிலைகள் குறித்து ஆலோசித்துள்ளதாகவும், தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாகவும் கூறினார். நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்துள்ளதாகக் கூறிய சன்யால், நிகழ்வுகள் நம்மை நெருங்கும்போது நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என்று தெரிவித்தார்.

எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை

கடந்த மாதம் 2015 அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொண்ட அமெரிக்கா, முதல்கட்ட பொருளாதாரத் தடையை ஈரான் மீது விதித்தது. நவம்பர் மாதம் முதல் எண்ணெய் விநியோகத்தின் மீது தடையை விதிக்க உள்ளது.

விலையை உயர்த்த திட்டமா

இந்தியாப் பொருளாதாரத்தின் மீது விளைவுகளை ஏற்படுத்தும் வெளிப்புறக் காரணிகளைத் தெரிந்தே வைத்துள்ள நிதி அமைச்சர் அமைச்சர் அருண் ஜேட்லி, என்ன செய்யப்போகிறார் என்பது செப்டம்பர் மாத தடைக்குப் பிறகு தெரிய வரும்.

அச்சம்

பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் கவலையில்லாமல் உயர்த்த இது காரணமாகப் போகிறதா என்பதுதான் இந்தியக் குடிமகனின் அச்சமாக உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

India prepared to deal with every scenario, says govt adviser on Iran sanctions