ஆர்டிஐ கேள்விக்கு ஜிஎஸ்டி கேட்ட அரசு அலுவலகம்..!

மத்திய பிரதேசத்தினைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்பு ஆர்வலரான அஜய் தூபே மாநில வீட்டு வசதி வாரியத்திடம் அவர்களது அலுவலகத்தினைப் புதுப்பித்தற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டுள்ளார்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அஜய் தூபேவின் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் என்றால் அதற்குச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ஐ செலுத்து வேண்டும் என்று பதில் அளித்ததே ஆகும்.

ஜிஎஸ்டி வரி

அஜய் தூபே தான் கேட்ட ஆர்டிஐ விவரங்களின் நகலினை அளிக்க 43 ரூபாய் மற்றும் 36 ரூபாயினைச் செலுத்தியுள்ளார். ஆனால் அதற்கு 3.5 ரூபாய் மாநில ஜிஎஸ்டி மற்றும் 3.5 ரூபாய் மத்திய ஜிஎஸ்டி வரியினைச் செலுத்தினால் தான் பதில் அளிக்கப்படும் என்று பதில் வந்துள்ளது. அஜய் தூபேவின் ஆர்டிஐ கேள்விக்கு 9 சதவீத ஜிஎஸ்டி வரியினை விதித்துள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சில்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் ஜனவரி மாதம் ஆர்டிஐ சட்டம், 2005-ன் கீழ் தகவல் அளிக்க ஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு அளிக்கப் பரிந்துரைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய தகவல் ஆணையம்

ஆர்டிஐ கேள்விக்கு விவரங்கள் அளிப்பது சேவை இல்லை என்பதால் அதற்ஜி ஜிஎஸ்டி வரியை வசூலிப்பதில்லை என்றும் மத்திய தகவல் ஆணையம் பிப்ரவரி மாதம் தெரிவித்துள்ளது. ஆனால் விவரங்களுக்கான நகல் பெற கட்டணம் மட்டும் செலுத்தினால் மட்டும் போதுமானாது என்றும் தெரிவித்துள்ளது. இதனைப் பார்க்கும் போது மத்திய பிரதேச வீட்டு வசதி வாரியம் செய்துள்ளது சட்ட விரோதமானது என்றும் கூறப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

RTI applicant in Madhya Pradesh asked to pay ₹7 GST for information