சென்செக்ஸ் 332 புள்ளிகளும் நிப்டி 11,582 புள்ளியாகவும் சரிவு!

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை இந்திய பங்கு சந்தை குறியீடுகள் சரிந்து முடிந்தன. சந்தை நேரமுடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 332.55 புள்ளிகள் என 0.86 சதவீதம் சரிந்து 38,312.52 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 98.15 புள்ளிகள் என 0.84 சதவீதம் சரிந்து 11,582.35 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

உள்ளுர் சந்தையானது எப்எம்சிஜி, ரிலியாலிட்டி, மின்சாரம் , வங்கி துறை பங்குகளால் தொடர்ந்து 4-ம் நாளாகச் சரிந்துள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதிக்கு பிறகு இது மிகப் பெரிய சரிவாகும்.

Advertisement

இன்றைய சந்தையில் விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி வங்கி, சன் பார்மா, கோல் இந்தியா பங்குகள் லாபம் அளித்த அதே நேரம் இந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐடிசி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.

நுகர்வோர் சாதனங்கள் மற்றும் மெட்டல் துறை பங்குகளை விடப் பிற துறை அனைத்தும் நட்டத்தினையே பதிவு செய்துள்ளன.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 77.42 டாலர்களாகவும், WTI கச்சா எண்ணெய் விலை 69.80 டாலராகவும் ஓரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

English Summary

Sensex Plunges 332 Points, Nifty Settles Below 11,582
Advertisement