டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை வாயயை பிளக்க வைத்த விப்ரோவின் 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

விப்ரோ நிறுவனம் இதுவரை பெற்றிராத மிகப் பெரிய அளவிலான 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பதந்தினை 10 ஆண்டுகளுக்குப் பெற்று போட்டி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களை வாயை பிளக்க வைத்துள்ளது.

பெங்களுருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விப்ரோ நிறுவனத்தின் முதல் மிகப் பெரிய ஒப்பந்தம் இது என்ற போதிலும் சென்ற ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் இதே போன்ற 3 ஒப்பந்தங்களின் கீழ் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான வருவாயினைப் பெற்றுள்ளது.

அலைட் எச்ஆர் சர்வீசஸ்

விப்ரோ நிறுவனத்திற்குக் கிடைத்த இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதன் வருவாய் 1.6 டாலர் வரை உயரும். விப்ரோவிற்கு இந்த மிகப் பெரிய ஒப்பந்தத்தினை அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அலைட் எச்ஆர் சர்வீசஸ் நிறுவனம் அளித்துள்ளது.

சேவை ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தின் கீழ் அலைட் நிறுவனத்தின் முக்கியத் துறைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகளை விப்ரோ நிறுவனம் டிஜிட்டல் முறையில் மாற்றி அதன் மதிப்பினை மெறுகேற்றும்.

அபிதாலி நீமுச்வாலா

விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக அபிதாலி நீமுச்வாலா 2016-ம் ஆண்டுப் பதவி ஏற்ற பிறகு நடந்துள்ள மிகப் பெரிய முன்னேற்றமாகவும் இது பார்க்கப்படுகிறது.

எச்ஆர் சர்வீசஸ் இந்தியா

2018 ஜூலை மாதம் 117 மில்லியன் டாலர் அளித்து அலைட் எச்ஆர் சர்வீசஸின் இந்திய சேவையினைக் கைப்பற்றி அதனை நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையிலும் குறிப்பிட்டு இருந்தது.

விப்ரோ

கடந்த சில ஆண்டுகளாகவே விப்ரோ அதன் போட்டி நிறுவனங்களுக்கு இணையாக எந்த ஒப்பந்தங்களையும் பெறாமல் இந்தியாவின் 3 மிகப் பெரிய ஐடி நிறுவனத்தில் இருந்து 4-ம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் 3 இடத்தினைப் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள்

ஏர்செல் உட்பட இந்தியாவின் பல முக்கிய வாடிக்கையாளர்கள் விப்ரோவின் வாடிக்கையாளர்களாக இருந்து திவால் ஆனது மிகப் பெரிய வருவாய் இழப்பினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Wipro Bags $1.5 Billion Deal And Joins Peer TCS In Large Deal Winning