புளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட மோடி, தேர்தலை எப்படிச் சமாளிக்கப் போகிறார்!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு நிதி ஆண்டில் 7.3 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்ற பன்னாட்டு நாணய நிதியத்தின் கணிப்பை அபத்தமாக்கும் வகையில், நடுக்கத்தர வர்க்கத்துக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க மோடியின் பாரதத் தேசம் தவறி விட்டது.

உறைந்து போன பொருளாதாரச் சீர்திருத்தங்களும், பலவீனமான வங்கித்துறையும், கடுமையான தொழிலாளர் நலச் சட்டங்களும்,ஒழுங்கற்ற கல்வி முறையும் இதற்குக் காரணமாக அமைந்தன.

பிற்போக்குத்தனம்

வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுடன் பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை எட்ட வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. ஆனால் பிற்போக்கான சீர்திருத்தங்களும், கல்வி முறைகளும் ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியன் இளைஞர்களுக்குப் போதிய வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை.

முயற்சி

வளர்ச்சிக்கு இடைநிற்கும் தடைகளைத் தகர்க்க பல்வேறு நடவடிக்கைகளைப் பிரதமர் எடுத்து வந்துள்ளார். நாடு தழுவிய நுகர்வு வரியும், நிறுவனங்களுக்கான திவால் சட்டமும் இதில் அடக்கம். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

வாய்ப்புகள் மறுப்பு

பொருளாதார வளர்ச்சிக்கான வாயிற்கதவுகளை இன்னும் விசாலமான முறையில் திறக்கவில்லை என்று கூறும் வல்லுநர்கள், சீனாவைப் போல முதலீடுகளை அதிகரிக்கவோ, நடுத்தர வர்க்கத்துக்கான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கவோ முயற்சி எடுக்கவில்லை என்கின்றனர். 2.6 டிரில்லியன் டாலர்களைக் கொண்ட இந்திய பொருளாதாரத்தை விடச் சீனா 12.2 டிரில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

பாரபட்சம்

குறிப்பிட்ட சிலரை மட்டும் பெரும் பணக்காரர்களாக உருவாக்கியுள்ள இந்தியா, நடுத்தர வருவாய் பெரும் லட்சோபலட்சம் மக்களை வறியவர்களாக வைத்துள்ளதாகப் பிரிட்டனின் முள்ளால் வர்த்தகச் செயலாளர் ஜி.,ஓ.நெய்ல் கூறினார்.

சீனா முன்னோடி

நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் நடந்த சீர்திருத்தங்களின் பயனாக 1991 களில் சராசரியாக 7 சதவீதம் வளர்ச்சி எட்டப்பட்டது.அதேநேரம் நவீனமயமாக்கல் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்னரே சீனா 10 சதவீத வளர்ச்சியைத் தொட்டது.

சோதனை

நடப்பு ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவீத வளர்ச்சியடைந்தது. அதேநேரம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ஆகச் சரிந்தது. வரும் மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை இழப்பதோடு, இறக்குமதி பணவீக்கத்தையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தனிநபர் வருமானம் குறைவு

90,000 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தொடர்வண்டித்துறை அறிவித்தது. 90 ஆயிரம் இடங்களுக்கு 28 மில்லியன் பேர் விண்ணப்பித்தனர். இந்திய ரயில்வேயில் குறைந்த பட்ச ஆண்டு வருமானம் 2,16,000 ரூபாய் ஆகும். சீனாவில் தனிநபர் வருமானம் 8800 டாலராக இருக்கும்போது இந்தியாவில் 1800 டாலராக உள்ளது. இளமையான நாடான இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

2 ஆபத்துகள்

இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை நீண்ட காலச் சவாலாக இருக்கும் என்று கூறியுள்ள பொருளாதார வல்லுநர் இஜாஸ் கனி, உலகளாவிய பாதுகாப்புக்கு இசைந்து தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மூக்கணாங்கயிறு போடுவதாகக் கூறியுள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பம் திறன்குறைந்த ஊழியர்கள் வேலைநீக்கத்துக்கு ஆளாக்கும் என்று தெரிவித்தார்.

நெருக்கடி

கிராமப்புற தொழிலாளர் ஆற்றலை பண்ணைத் தொழிலில் இருந்து தொழிற்சாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் சீனா பிரச்சனைக்குத் தீர்வு கண்டது. ஆனால் இந்தியாவில் உலகளாவிய வர்த்தகத் தொடர்புகளும், உள்நாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மோடிக்கு அறைகூவல்

அடுத்த ஆண்டு மோடி தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் வேலை வாய்ப்பின்மை சமூகக் கலவரங்களை உருவாக்க வாய்ப்புள்ளது. ஆண்டுத் தோறும் 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய மோடி, மக்கள் முன்பு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகால ஆட்சியின் முடிவில் நம்பகமான அளவில் அவர் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை.

தோல்வி

வேலை வாய்ப்பை உருவாக்கியதாக மோடி கூறிய வாக்குறுதிகளைப் பிரதிபலிக்கும் நம்பகமான தரவுகள் இல்லை. மோடியின் பொருளாதாரக் கொள்கை பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டுப் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 1.5 மில்லியன் பேர் உடனடியாக வேலை வாய்ப்பை இழந்தனர்.

தீர்வு

நிதிச் சீர்திருத்தங்கள், தொழிலாளர் சந்தைகளை விடுவித்தல், மென்மையான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நிதி மற்றும் நாணய ஒழுங்குமுறைகளைப் பராமரிப்பது மூலம் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

World’s Fastest Growing Economy India Is Unable To Grow Fast In Create Enough Jobs