பிள்ப்கார்ட் உடனான போட்டியை சமாளிக்க இந்தி இணையதளம் & செயலியை அறிமுகம் செய்த அமேசான்!

இந்திய இ-காமர்ஸ் சந்தையில் வேகமான வளர்ச்சியினைப் பெற அமேசான் நிறுவனம் இந்தி மொழியில் இணையதளம் மற்றும் செயலியினை அறிமுகம் செய்துள்ளது. இதனால் பிளிப்கார்ட் நிறுவனத்தினை விட வேகமான வளர்ச்சியினை அமேசான் அடைய வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களில் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், பேடிஎம் மால் என யாருக்கும் இந்திய பிராந்திய மொழிகளில் செயலி மற்றும் இணையதளம் இல்லாத நிலையில் அமேசான் நிறுவனம் செவ்வாய்க்கிழமை இந்தியில் இ-காமர்ஸ் சேவைகளை அளிக்க உள்ளது.

தமிழில் அமேசான்

இந்தி மட்டும் இல்லாமல் விரைவில் அமேசான் நிறுவனம் தமிழ் உட்பட இந்தியாவின் பிற பிராந்திய மொழிகளிலும் தனது செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

புதிய வாடிக்கையாளர்கள்

அமேசான் நிறுவனத்தின் இந்தி மொழி இணையதளம் மற்றும் செயலி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் அதிகளவில் கவரும்.

பிராந்திய மொழி இ-காமர்ஸ் சந்தை

பிராந்திய மொழி சேவைகளின் கீழ் இந்தியாவில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் அமேசான் விரைவில் பெறும் என்று அமேசான் இந்தியாவின் துணை தலைவரான மனிஷ் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான இ-காமர்ஸ் சந்தை உள்ளதாக மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட்

தற்போது பிளிப்கார்ட் அதன் துணை நிறுவனமான மைந்தரா, ஜபாங் உடன் அமேசான் இந்தியாவினை விட மிகப் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Amazon India Launched Hindi website, app in battle with Flipkart