சென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்வு!

சென்னையில் இன்று (05/09/2018) ஆபரணத் தங்க விலை சவரன் ஒன்றுக்கு 56 ரூபாய் உயர்ந்து 23,120 ரூபாய் என்றும், கிராம் ஒன்றுக்கு 2,890 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் 24 காரட் தங்கம் 3034 ரூபாய் கிராம் என்றும் சவரன் 24,272 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இன்று பிற்பகல் சர்வதேச சந்தையில் தங்க விலை சரிந்துள்ளதால் புதன் கிழமை தங்கத்தின் விலை சரிய வாய்ப்புள்ளது.

அமெரிக்க வட்டி விகிதங்களை உயர்த்தியதால் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் தங்கம் விலை 8 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

வெள்ளி விலை திங்கட்கிழமை 10 பைசா குறைந்து கிராம் ஒன்றுக்கு 39.90 பைசா என்றும் கிலோ 39,990 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கிராம் ஒன்றுக்கு இன்று 20 பைசா என சரிந்து 39.70 ரூபாய் என்றும் கிலோ 39,700 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆந்திர பிரதேசத்தில் 22 காரட் தங்கம் 1 கிராம் 2889 ரூபாய் என்றும், டெல்லியில் 2,950 ரூபாய் என்றும், குஜராத்தில் 2960 ரூபாய் என்றும், கர்நாடகாவில் 2,835 ரூபாய் என்றும், கேரளாவில் 2,815 ரூபாய் என்றும், மகாராஷ்டிராவில் 2,967 ரூபாய் என்றும், மேற்கு வங்கத்தில் 2,980 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Gold Rate Today 04/SEP/2018