9 வருடத்திற்கு பிறகு தங்கத்தினை வாங்கும் ஆர்பிஐ.. ஏன் தெரியுமா?

உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக 8.46 மெட்ரிக் டன் தங்கம் கருவூலத்துக்கு கிடைத்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு நாணயச் சொத்துக்களை தக்க வைத்துக் கொள்ள முயன்றுள்ள ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 577.77 மெட்ரிக் டன்னாக இருந்த தங்கத்தை, 2018 ஜூனில் 566.23 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

தங்க கொள்கை

2017-18 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வெளிநாட்டு நாணயச் சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு, தங்கக் இருப்புக் கொள்கையில் கவனம் செலுத்தப்படுகிறது. பன்னாட்டு நிதியத்தின் வரையறுக்கப்பட்ட தங்க விற்பனை திட்டத்தின் கீழ், 200 மெட்ரிக் டன் தங்கத்தை 2009 ஆண்டு ரிசர்வ் வங்கி வாங்கியது.

பாதுகாப்பு

பீப்பிள்ஸ் பேங்க் ஆப் சீனா, பேங்க் ஆப் ரஷ்யா போன்று இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை வழக்கமாக கொள்முதல் செய்வதில்லை. உலக சந்தைகளில் ஏற்படும் நிச்சயமற்ற ஒரு சூழலில் தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்தாக கருதப்படுகிறது.

உள்நோக்கம் இல்லை

17.9 மில்லியன் ட்ராய் அவுன்ஸ் தங்கத்தை கடந்த 9 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி நிலையான சொத்தாக பராமரித்து வந்தது ஆனால், 2017 டிசம்பரில் தங்க இருப்பை அதிகரிக்கத் தொடங்கியது. 18.20 மில்லியன் ட்ராய் அவுன்ஸ் ஆக உயர்ந்தது. இதன் உள்நோக்கம் குறித்து ரிசர்வ் வங்கி எதுவும் சொல்லவில்லை.

கவனம்

உலகச் சந்தையில் அடிக்கடி நிகழும் மாற்றங்களில் இருந்தும் , வட்டி விகிதங்களை அதிகரிக்கும் அமெரிக்காவின் போக்குகளில் இருந்தும், அந்நியச் செலாவணி கையிருப்பை காப்பாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்குவதில் கவனம் செலுத்துவதாக பொருளாதார நிபுணர் சவுகத்தா பட்டாச்சார்யா கூறினார்.

விவேகமா

அமெரிக்கா பொருளாதார எழுச்சி பெறும்போது தங்கத்தில் முதலீடு செய்வது விவேகமான செயல் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையே 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க கருவூலப்பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்றுள்ளது. 450 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களை வைத்திருந்தாலும் இழப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

RBI buys gold for the first time in 9 years to diversify assets