சென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 11,520 புள்ளியாகவும் சரிவு!

எப்எம்சிஜி, வங்கி பங்குகள் சரிவால் இந்திய பங்கு சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிந்துள்ளது. சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 154.60 புள்ளிகள் என 0.40 சதவீதம் சரிந்து 38,157.92 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 62.05 புள்ளிகள் என 0.54 சதவீதம் சரிந்து 11,520.30 புள்ளியாகவும் சரிந்தது வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

Advertisement

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத விதமாகச் சரிந்து 71.53 டாலராக வர்த்தகச் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ரூபாய் மதிப்பு சரிவால் ஐடி நிறுவனப் பங்குகள் லாபம் அளித்தன. அதே நேரம் எப்எம்சிஜி மற்றும் வங்கி துறை பங்குகள் நட்டம் அளித்தன.

இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, அக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கி பங்குகள் லாபம் அளித்தன. ஏசியன் பெயிண்ட், எஸ்பிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், கோல் இந்தியா, இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்தன.

சென்னையில் இன்று (05/09/2018) ஆபரணத் தங்க விலை சவரன் ஒன்றுக்கு 56 ரூபாய் உயர்ந்து 23,120 ரூபாய் என்றும், கிராம் ஒன்றுக்கு 2,890 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் 24 காரட் தங்கம் 3034 ரூபாய் கிராம் என்றும் சவரன் 24,272 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

வெள்ளி விலை திங்கட்கிழமை 10 பைசா குறைந்து கிராம் ஒன்றுக்கு 39.90 பைசா என்றும் கிலோ 39,990 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கிராம் ஒன்றுக்கு இன்று 20 பைசா எனச் சரிந்து 39.70 ரூபாய் என்றும் கிலோ 39,700 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 77.42 டாலர் பேரல் எனவும், WTI கசா எண்ணெய் 69.80 ரூபாய் என்று குறைந்துள்ளது. ஆனால் இந்திய ரிடெயில் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

English Summary

Sensex falls 155 pts, Nifty down 11,520 points
Advertisement