இந்தியாவின் 2-வது 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் படைத்த நிறுவன என்ற பெயரை பெற்ற டிசிஎஸ்!

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை வழங்கும் நிறுவனமான டிசிஎஸ் செவ்வாய்க்கிழமை 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் படைத்த 2-ம் இந்திய நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனத்தினைப் பெற்று இருந்தது.

டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் உயர்வுக்கு ரூபாய் மதிப்புச் சரிவு மற்றும் இந்த மாதம் நடைபெற உள்ள பங்குகள் பைபேக் உள்ளிட்டவையே காரணம் ஆகும்.

பங்கு சந்தை

இன்றைய சந்தை நேர முடிவில் டிசிஎஸ் பங்குகள் 98.25 புள்ளிகள் என 1.86 சதவீதம் உயர்ந்து 2,093.20 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

2018-ம் ஆண்டில் இதுவரை டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 54.6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் செப்டம்பர் 6 முதல் 21 வரை பங்குகள் பைபேக் மூலம் திரும்பப்பெறவும் உள்ளது.

 

பைபேக்

டிசிஎஸ் நிறுவனமானது 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான 54.77 மில்லியன் பங்குகளைத் திரும்பப் பெற உள்ள நிலையில் ஒவ்வொரு பங்குகளையும் 2,100 ரூபாய் என்று விலை கொடுத்து வாங்க இருப்பதாகத் தெரிவித்து இருந்தது.

ஏன் பைபேக்?

பைபேக் மூலம் டிசிஎஸ் பங்குகளைத் திரும்பப் பெற்ற பிறகு நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும், பங்குதாரர்களின் லாபமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலாண்டு அறிக்கை

டிசிஎஸ் நிறுவனமானது 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையில் 4.1 சதவீத வருவாய் வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. நிகர லாபமானது 1.1 சதவீதம் உயர்ந்து 1.08 பில்லியன் டாலாரக இருந்தது. இதுவே சென்ற ஆடு 1.04 பில்லியன் டாலாரக இருந்தது.

Have a great day!
Read more...

English Summary

TCS scales RS 8 trillion market cap next to Reliance Industries