ரூ. 999 முதல் விமான பயணம்.. ஏர்ஏசியாவின் அதிரடி சலுகைகள்!

ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் குறுகியகாலச் சலுகையாக, குறிப்பிட்ட பாதைகளுக்கு மட்டும் ரூ999 முதல் விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது. 'பிக் சேல்' என அழைக்கப்படும் விளம்பர திட்டத்தின் கீழ் உள்நாட்டு விமானப் பயணங்களுக்குச் சலுகைவிலையில் டிக்கெட்கள் வழங்குகிறது. ஏர்ஏசியாவின் இந்த ரூ999 சலுகை 9 செப்டம்பர் 2018 வரை கிடைக்கும் என அந்நிறுவன இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ரூ.999 சலுகை

ரூ999 ஏர்ஏசியா சலுகை திட்டத்தின் கீழ் வரும் சில விமானப் பாதைகளின் துவக்க கட்டணம் பின்வருமாறு.

கொச்சி - பெங்களூர் : ரூ999
கவுகாத்தி - இம்பால் : ரூ999
பெங்களூர் -சென்னை : ரூ999
ஹைதராபாத் - பெங்களூர் : ரூ1099
புவனேஷ்வர் - கொல்கத்தா :ரூ1199
ராஞ்சி- கொல்கத்தா :ரூ1099

 

பிற சலுகை வழித்தடங்கள் பட்டியல் 1

கொச்சி - ஹைதராபாத் :ரூ1699
கொல்கத்தா - பேக்டாக்ரா :ரூ1499
கொல்கத்தா - விசாகப்பட்டினம் :ரூ 1699
கோவா - பெங்களூர் : ரூ1299
கோவா- இந்தூர் :ரூ1299
கோவா- ஹைதராபாத் :ரூ1699
புதுடெல்லி - ஶ்ரீநகர் :ரூ 1699
பூனே - பெங்களூர் : ரூ1299

பிற சலுகை வழித்தடங்கள் பட்டியல் 2

பெங்களூர் - புவனேஷ்வர் : ரூ1699
பெங்களூர் - விசாகப்பட்டினம் :ரூ1299
பேக்டாக்ரா - கொல்கத்தா :ரூ1499
பெங்களூர் - புதுடெல்லி : ரூ2499
விசாகப்பட்டினம்- கொச்சி: ரூ2499
புதுடெல்லி - இராஞ்சி - ரூ1999

சலுகை காலம்

இத்திட்டத்தில் 18 பிப்ரவரி 2019 முதல் 26 நவம்பர் 2019 வரை பயணம் செய்யக்கூடிய வகையில் டிக்கெட்களைப் பதிவு செய்யலாம் என ஏர்ஏசியா கூறியுள்ளது.

சர்வதேச விமானப் பயணம்

மேலும் ஏர்ஏசியாவின் 'பிக் சேல்' திட்டத்தில், சர்வதேச விமானப் பயணத்திற்கு அனைத்தும் உள்ளடக்கிய ஒரு வழி பயணக்கட்டணம் ரூ1399 முதல் சலுகைவிலையில் வழங்குகிறது.

கோலாலம்பூர், பேங்காக், க்ராபி, சிட்னி, ஆக்லாந்து, மெல்போர்ன், சிங்கப்பூர் மற்றும் பாலி போன்ற சர்வதேச நகரங்களுக்குப் பயணம் செய்ய வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பயன்படுத்தலாம்.

 

எந்த விமானங்களில் எல்லாம் சலுகை கிடைக்கும்?

இந்த இரு உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணச் சலுகைகளும், ஏர்ஏசியாவின் தொடர்பு நிறுவனங்களான ஏர்ஏசியா இந்தியா, ஏர்ஏசியா பெர்காட், தாய் ஏர்ஏசியா மற்றும் ஏர்ஏசியா எக்ஸ் நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் கிடைக்கும்.

கோஏர்

கோஏர் நிறுவனமும் விளம்பரத்திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ1099 முதல் விமான டிக்கெட்களைத் தருகிறது. 5 செப்டம்பர் 2018 வரை இந்தச் சலுகை கிடைக்கும்.இத்திட்டத்தில் 3 செப்டம்பர் 2018 முதல் 31 மார்ச் 2019 வரை பயணம் செய்யக்கூடிய வகையில் டிக்கெட்களைப் பதிவு செய்யலாம்.

இண்டிகோ

இண்டிகோ நிறுவனமும் 10 லட்சம் டிக்கெட்களைச் சலுகை விலையில் தருவதாக அறிவித்துள்ளது. இதில் உள்நாட்டுப் பயணத்திற்கு ரூ999 முதலும், சர்வதேச பயணத்திற்கு ரூ3199 முதலும் டிக்கெட்கள் கிடைக்கும். செப்டம்பர் 6 ல் முடியும் இந்த விழாக்காலச் சலுகை, 3 செப்டம்பர் 2018 முதல் 31 மார்ச் 2019 வரை பயணம் செய்யக்கூடிய டிக்கெட்களுக்குக் கிடைக்கும்.

Have a great day!
Read more...

English Summary

AirAsia India offers flight tickets from Rs 999 in new sale