ஏடிஎம் கார்டினை தெரிக்க விடும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் QR கார்டு.. பயன்படுத்துவது எப்படி?

சென்ற வாரம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை துவங்கப்பட்டுள்ள நிலையில் ஏடிஎம் டெபிட் கார்டுகளுக்குப் பதிலாகப் பணம் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை செய்வதற்காக QR கார்டினை அறிமுகம் செய்துள்ளனர்.

இது பார்க்க ஏடிஎம் கார்டு அளவில் இருந்தாலும் QR கார்டுக்குப் பின் எண் எல்லாம் கிடையாது என்றும் பையோமெட்ரிக் தரவுகள் தான் தேவி என்றும் தெரிவித்துள்ளனர். இந்த QR கார்டு முறை இந்திய வங்கி துறைகளில் புதிய மாற்றத்தினைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

QR கார்டு நன்மை

QR கார்டு வைத்துள்ளவர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேமிப்பு கணக்கையும் நினைவில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை, பின் எண் தேவையில்லை. ஆனால் பணப் பரிமாற்றம், பணப் பரிவர்த்தனை, பில்கள் செலுத்துதல், ஷாப்பிங் செய்யும் போது பணமில்லா பரிவர்த்தனை போன்றவற்றைச் செய்யலாம் என்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.

சேமிப்புக் கணக்குகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை சாதாரன, டிஜிட்டல் மற்றும் அடிப்படை என மூன்று வகையான சேமிப்பு கணக்குகளை அளிக்கிறது. மேலும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பாங்க் நடப்பு கணக்குகளையும் அளிக்குமாம்.

QR குறியீடு

QR கார்டில் QR குறியீடு அல்லது பார்கோடுகள் இருக்கும். இந்த QR குறியீடுகளை ஸ்மார்ட்போன் அல்லது மைக்ரோ ஏடிஎம் மூலம் ஸ்கான் செய்து கணக்கு உரிமையாளரைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

ஏடிஎம்-ஐ விடப் பாதுகாப்பானது

QR குறியீடு ஏடிஎம் கார்டுகளை விடப் பாதுகாப்பாகப் பையோமெட்ரிக் பாதுகாப்பினை வழங்குகிறது. ஏடிஎம் பின் எண் தெரிந்தால் உங்கள் கார்டினை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் QR கார்டினை அப்படிப் பயன்படுத்த முடியாது. QR கார்டு தொலைந்தாலும் பணம் பாதுகாப்பாக இருக்கும்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி QR கார்டை பயன்படுத்துவது எப்படி?

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி QR கார்டை எளிமையாக 3 படிகளில் பயன்படுத்தலாம்.

1. QR குறியீட்டை ஸ்கான் செய்தல்
2. பையோமெட்ர்க் சரிபார்ப்பினை செய்க
3. பரிவர்த்தனையினை முடிந்தது

 

QR கார்டை எங்கு எல்லாம் பயன்படுத்தலாம்?

QR கார்டை பணம் விதிடிராவ் செய்ய, பணம் டிரான்ஸ்பர் செய்ய, பணம் செலுத்த மற்றும் கேஷ்லஸ் ஷாப்பிங் போன்றவற்றைச் செய்யலாம்.

டோர்ஸ்டெப் பாங்கிங்

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவையினை உங்கள் வீட்டின் டோர்ஸ்டெப்பில் பெற ஒரு பணப் பரிவர்த்தனைக்கு 25 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்குத் தபால் டெலிவரி செய்பவர் இரண்டு சரிபார்ப்பினை செய்வார். இதற்கும் QR குறியீடு மற்றும் பையோமெட்ரிக் தரவுகள் கட்டாயம் ஆகும். இந்தச் சரிபார்ப்புகளை எல்லாம் செய்த பிறகு தான் உங்கள் கையில் பணம் அளிக்கப்படும்.

விரைவில் இந்த QR கார்டுகளை அனைத்துக் கடைகளில் பயன்படுத்தும் வகையில் செயலாக்க உள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

 

Have a great day!
Read more...

English Summary

India Post Payments Bank's QR Card To Kill ATM card. How and where to use