ஜெட் ஏர்வேஸின் அதிரடி சலுகை.. 25 லட்ச விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழக்கமான கட்டணங்களில் இருந்து மூன்றில் ஒரு பங்கு சலுகைகளுடன் 25 லட்சம் டிக்கெட்களை அறிவித்து அதிரடியைத் தொடங்கியுள்ளது.

செவ்வாய்க் கிழமை தொடங்கிய முன்பதிவுகள், தொடர்ந்து 6 நாட்களுக்கு நடைபெறுகிறது. டிக்கெட் பெற்றவர்கள் செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு மேல் சலுகை விலையில் விமானத்தில் பறக்க முடியும்.

30 விழுக்காடு சேமிப்பு

இந்தியாவுக்குள் பயணம் செய்வோருக்கு 30 விழுக்காடுகள் வரை சேமிப்பை வழங்குகிறது. லண்டன், கனடா, ஐரோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆசிய நாடுகளுக்குப் போக வர சலுகை விலை டிக்கெட்டுகளை அளிக்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நட்டம்

எரிபொருள் விலையேற்றம், குறைந்த கட்டணச் சேவை மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, ஜூன் காலாண்டில் 1300 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்தது. நிறுவனத்தின் முலதனத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் சலுகை பயணத் திட்டத்தை ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல் அறிவித்துள்ளார்.

அழைப்பு

உலகளாவிய அளவில் சுற்றுலா செல்வதற்குச் சலுகை விலை டிக்கெட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ள ஜெட் ஏர்வேஸின் துணைத் தலைவர் ராஜ் சிவகுமார், சேமிப்புகளைத் தாராள வழங்குவதாக உறுதி அளித்தார்.

தள்ளுபடிகள்

இதற்கு முன்னர் 999 ரூபாய் என்ற ஆரம்ப விலைக் கட்டணத்தில் 10 லட்சம் டிக்கெட்களைச் சலுகை விலையில் இண்டிகோ நிறுவனம் அறிவித்தது. ஏர் ஏசியா நிறுவனம் 1399 ரூபாய் கட்டணத்தில் தள்ளுபடியை வழங்கியது.

66 இடங்கள்

66 இடங்களுக்குச் சென்று வர இந்தப் பயணச் சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பயணம் செல்வோர் போகவும், வரவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Have a great day!
Read more...

English Summary

Jet Airways Offers 25 Lakh seats Under 30% Discounts