ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு வந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற அசூர வளர்ச்சி..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வணிக ரீதியான சேவைகள் 2016 செப்டம்பர் 5-ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் இன்றோடு 2 வருடங்கள் நிறைவு செய்துள்ளது.

சேவையினை அளிக்கத் தொடங்கியதில் இருந்து 6 மாதங்களுக்குக் கட்டணங்கள் ஏதுமின்றி இலவச சிம், குரல் அழைப்புகள், தரவு என இந்திய டெலிகாம் துறையினையே 4ஜி சேவையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ ஆட்டிப்படைத்தது. இப்படிப்பட்ட ஜியோ நிறுவனம் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

லைப் பிராண்டு மொபைல்

ஜியோ சேவை வணிக ரீதியாகத் துவங்குவதற்கு முன்பே 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லைப் பிராண்டு 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. பின்னர் மைஜியோ, ஜியோசாட், ஜியோ பிளே, ஜியோ ஆன் டிமேண்ட், ஜியோ பீட்ஸ், ஜிஓ மேக்ஸ், ஜியோ எக்ஸ்பிரஸ் நியூஸ், ஜியோ டிரைவ், ஜியோ ஜாயின், ஜியோ மனி மற்றும் ஜியோ செக்யூரிட்டி போன்ற செயலிகளையும் அறிமுகம் செய்தது.

இறுதியாகத் தான் செப்டம்பர் 1ம் தேதி ஜியோவின் இலவச குரல் அழைப்புகள் மற்றும் தரவு சேவைகள் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜியோ பிரைம் சேவை

டிசம்பர் மாதம் வரை முதற்கட்டமாக இலவசமாக வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தரவு சேவைகளை அளித்து வந்த ஜியோ மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க மேலும் 3 மாதங்களுக்குத் தரவினை மட்டும் குறைத்து இலவசமாகச் சேவையினை வழங்கியது. இப்படியே 2017 ஏப்ரல் மாதத்தில் ஜியோ நிறுவனம் 108.9 மில்லியன் பயனர்களைப் பெற்று இருந்தது.

ஜியோ போன்

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜியோபோன் என்ற குறைந்த விலையிலான 4ஜி பியூச்சர் போனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்தது.

ஜியோ போன் 2 மற்றும் ஜியோ ஜிகாஃபைபர்

2018-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 41வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஜியோபோன்2 மற்றும் ஜியோஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பியூச்சர் போன்களில் பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்ஆப் மற்றும் கூகுள் மெப்ஸ் செயலிகளையும் அறிமுகம் செய்துள்ளது.

சந்தை நிலவரம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கிய 170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள நிலையில் ஜூன் மாத நிலவரத்தின் படி 215 மில்லியன் வாடிக்கையாளர்கள் பெற்று இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் என்ற நிலையினை எட்டியுள்ளது.

லாபம்

ஜியோ முன்பு முதலே டெலிகாம் சேவை வழங்கி வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் நட்டம் அடைந்து வரும் நிலையில் சென்ற 3 காலாண்டாக லாபத்தினைப் பதிவு செய்து வருகிறது ரிலையன்ஸ் ஜியோ.

Have a great day!
Read more...

English Summary

Mukesh Ambani's Reliance Jio Completed 2 Year Journey Successfully: Report Card