எஸ்பிஐ சினிமாஸை வாங்கியதை அடுத்து வெளிநாடுகளில் கவனம் செலுத்தி வரும் பிவிஆர்!

சவூதி அரேபியா, துபாய் உள்ளிட்ட உலக நாடுகளில் திரையரங்க வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள இந்தியாவின் திரையரங்க குழுமமான பி.வி.ஆர், அடுத்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை தலைநகர் கொழும்புவில் 9 அடுக்குத் திரையரங்கை திறக்கத் திட்டமிட்டுள்ளது.

உள்ளூர் திரையரங்குகளை மிக வேகமாகக் கைவசப்படுத்தி வரும் பி.வி.ஆர் குழுமம், பல அடுக்குத் திரையரங்குகளைத் திறக்க வெளிநாடுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

1000 திரையரங்குகள்

எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தை அண்மையில் வாங்கிய பி.வி.ஆர் நிறுவனம், திரையரங்குகளின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் மட்டும் 1000 திரையரங்குகளை வசமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது ரியல் எஸ்டேட் துறை மந்தகதியில் இருப்பதால், திட்டத்தைத் துரிதப்படுத்த முடியாமல் திணறுகிறது.

இலங்கையில் திரையரங்கு

திரையரங்க வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதால், தொழிலை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகப் பி.வி.ஆர் நிறுவனத்தி தலைமை நிதி அதிகாரி சூத் தெரிவித்தார். பல அடுக்கு திரையரங்குகள் இல்ங்கையில் இல்லாததால் அங்கு முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.

நல்ல சூழல்

சவூதி அரேபியா சினிமாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுப் பிளாக் பந்தர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையிடப்பட்டது. இளவரசர் முகமது பின் சல்மான் நவீனமாக்க முடிவு செய்துள்ளார்.

துபாயில் தொழில்

துபாயில் அல் ப்யூட்டன் என்ற நிறுவனத்துடன் இணைந்து திரையரங்குகளைத் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் பி.வி.ஆர் கையெழுத்திட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் திரையரங்குகளை வடிவமைக்க முடிவு செய்துள்ளது.

700 திரையரங்கம்

டிடி சினிமாஸ் லிமிடெட் மற்றும் சினிமாஸ் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களை வாங்கியுள்ள பி.வி.ஆர் திரையரங்கு குழுமம் 700 க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நடத்தி வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

PVR eyes overseas expansion after India acquisitions