ஈரானிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்ய அமெரிக்காவை பகைத்துக்கொண்டால் என்ன ஆகும்?

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை காவு வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஈரான் எரிபொருள் மீதான பொருளாதாரத் தடை நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்நிலையில் எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க இந்தியா மறுக்கும் என்று கூறப்படுகிறது

இக்கட்டான இந்தக்கால கட்டத்தில் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் டெல்லியில் நாளை ஆலோசனை நடத்துகிறது. இருநாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.

ஈரானைப் பகைத்தால்....

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தேவைக்கு இந்தியா வெளிநாடுகளையே அதிக அளவில் நம்பியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மலிவான விலையில் எண்ணெய் இறக்குமதி செய்யும் செய்யும் ஈரானை பகைத்துக் கொண்டால் நிலைமை மேலும் சிக்கலாகும். ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் இந்தியா 83 விழுக்காடு அயல்நாடுகளையே நம்பி இருக்கிறது.

முக்கியத்துவம்

எண்ணெய் விலை உலகச் சந்தையில் தொடர்ந்து அதிகரிப்பதால், மாற்று எரிபொருளை இந்தியா விரும்புகிறது. இருப்பினும் வளர்ச்சி விகிதங்களும், பணவீக்கமும் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் விலைகளே தீர்மானிக்கிறது என்கின்றனர் இந்திய அதிகாரிகள்.

முடிவு

கடந்த ஆண்டு வர்த்தகப் பற்றாக்குறையில் துண்டு விழுந்த 1 பில்லியன் டாலரைக் குறைக்க உதவியதால், அமெரிக்காவின் இறக்குமதியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதேபோல் நடப்பு ஆண்டில் 2.5 பில்லியன் டாலர் எரிபொருளை இறக்குமதி செய்யவும் முடிவு செய்துள்ளது.

முயற்சி

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் கடந்த ஆகஸ்டு மாதம் அமலுக்கு வந்தன. பெட்ரோலியப் பொருட்கள் மீதான தடை நவம்பர் 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில் இறக்குமதி யில் குறிப்பிடத்தக்க சில சலுகைகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் ஈரானுடன் வர்த்தக உறவு மேற்கொள்ளும் நாடுகளைத் துண்டிக்கவும் தயாராகி வருகிறது. இதில் விலக்குப் பெற இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.

சிக்கல்கள்

நவம்பர் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிகளவு தள்ளுபடிகள் கிடைக்கும் என்பதால் ஈரானின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா தவிர்க்க முடியவில்லை. அதே நேரம் சரக்கு மற்றும் காப்பீடு விவகாரத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. ஈரான் கொள்முதலை ஆதரிக்க முடியாது என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளதால், பணம் செலுத்தும் வழிகளைக் கண்டறிய வேண்டிய சூழல் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

முக்கியப் பங்காளி

இஸ்லாமிய நாடுகளின் எண்ணெய் இறக்குமதியில் சீனாவுக்குப் பிறகு இந்தியாதான் முக்கியப் பங்காளியாக இருக்கிறது. கச்சா எண்ணெய் புதிய வடிவத்தில் இறக்குமதி செய்யும் வேளையில், அதனைச் சுத்திகரிப்பதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டறிவதில் நேரமும், முயற்சியும் இந்தியாவுக்குத் தேவையாக இருக்கிறது.

Have a great day!
Read more...

English Summary

Won’t be able to cut oil imports from Iran, India likely to tell US