இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் சரியா?

ஜூன் மாத காலாண்டில் உற்பத்தித்துறையில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்தாக வெளியான மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மீது, நாணயக்கொள்கைக் குழுவின் உறுப்பினர் ரவீந்திர தொலாக்கியா தீவிரமான சந்தேகங்களை எழப்பியுள்ளார்.

உற்பத்தி மதிப்பு தொடர்பான தொழில்துறையின் வருடாந்திரத் தரவுகளை வெளியிடுவதற்குப் பதிலாக, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி தெரிவித்துள்ளதாக பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஒப்பீடுகளை சுட்டிக்காட்டி, நடுவன் அரசின் கூற்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

புள்ளி விவர அமைச்சகம்

ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் உற்பத்தித் துறை 13.5 விழுக்காடு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாவும், இதன்மூலம் 8.2 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் புள்ளி விவர அமைச்சகம் அண்மையில் தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வர்த்தகயுத்தம் நடக்கும் இந்த நிச்சயமற்ற சூழலில் அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள், விரைவான லளர்ச்சியை சாத்தியப்படுத்தியதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

சந்தேகம்

பொருளாதார வளர்ச்சிக்கான புள்ளி விவரத்தில் உள்நாட்டு உற்பத்தியை செயற்கையாக மதிப்பிட்டிருக்க வேண்டும். அல்லது மிகைப்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார் தொலாக்கியா. அதனால்தான் உயர்ந்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தின் மதிப்பீடுகள் பற்றி தவிரமான சந்தேகத்தை எழுப்பி கட்டுரையில் உண்மையை நிறுவு முயல்கிறார்.

ரிசர்வ் வங்கி நிலைப்பாடு

எண்ணெய் விலை உயர்வு, வர்த்தக மோதல், நாணயப்போர் உள்ளிட்ட பதட்டங்களால்,ஆண்டின் வளர்ச்சி விகிதக் கணிப்பை 7.4 விழுக்காடாக ரிசர்வ் வங்கி பராமரித்து வருகிறது. பணவீக்க அழுத்தங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் மாதத்திலிருந்து இரண்டு முறை வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டன.

எதிர்ப்பு-வாதம்

ஆகஸ்டு மாதம் நடைபெற்ற கூட்டத்தில் வட்டி விகிதங்களை அதிகரிக்க தாம் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறும் தொலாக்கியா, வட்டி விகிதக் குறைப்பின் மூலம் வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும் என வாதிடுகிறார்.

Have a great day!
Read more...

English Summary

Central Bank’s Rate Panel Member Questions World Beating Growth Numbers