பிரியாணி மற்றும் சமோசா விற்பனையினை நிறுத்திய ஐகியா.. ஏன்?

ஸ்வீடிஷை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய ஃபர்மிச்சர் நிறுவனமான ஐகியா சென்ற மாதம் ஹைதராபாத்தில் தங்களது கிளையினைத் தொடங்கியது. அதில் ஃபர்னிச்சர்கள் மட்டும் இல்லாமல் சுட சுட சமோசா மற்றும் பிரியாணி உள்ளிட்ட உணவு பொருட்களை விற்று வந்தது.

சென்ற வாரம் சைவ பிரியாணியில் புழு இருந்ததாக எழுந்த புகார்களை அடுத்து தங்களது ஹைதராபாத் கிளையில் பிரியாணி மற்றும் சமோசா விற்பனையினை நிறுத்தியுள்ளதாகப் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு - ஐகியா

சர்வதேச நிறுவனமான ஐகியா தங்களிடம் உணவு பாதுகாப்புக் குறித்துச் சிறந்த குழு உள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரையால் பிரியாணி மற்றும் சமோசா விற்பனையினை நிறுத்துவதாக ஐகியா தெரிவித்துள்ளது.

அபராதம்

ஐகியா நிறுவனம் விற்ற பிரியாணியில் புழு இருந்ததால் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்ரேசஷன் 11,500 ரூபாயினை அபராதமாக விதித்துள்ளது.

டிவிட்டர் பதிவு

அபீத் முகமது என்பவர் பிரியாணியில் புழு இருந்ததாக டிவிவ்ட்டர் மூலம் புகார் அளித்து இருந்தார். அபீப் முகமதுவின் புகாருக்கு உடனே ஐகியா மன்னிப்பு கேட்டாளும் ஆது சமுக வலைத்தளங்களில் டிராண்டாகியது.

ஐகியா

இந்தியாவில் தங்களது முதல் ஃபர்னிச்சர் நிறுவனத்தினை ஐகியா ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கிய நிலையில் 1,000 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடிய ரெஸ்டாரன்ட்டையும் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Ikea Baned Biryani, Samosa From Stores After Insect In Food Row