மோடியின் மேக் இன் இந்தியா வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.. நாராயண மூர்த்திப் புகழாரம்!

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தால் உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு உருவாகியுள்ளதாகப் பாராட்டியுள்ள இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, படிப்பறிவு அற்றவர்களுக்கும், முழுமையான கல்வித் தகுதி பெறாதவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்று தெரிவித்தார். அதேநேரத்தில் இந்திய தொழில் முனைவோரும், வெளிநாட்டு நிறுவனங்களும் படிப்பறிவற்றவர்களுக்கு வேவை வாய்ப்பு வழங்குவதிலிருந்து விலகி நிற்பதைச் சரிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உற்பத்தித்துறையைப் பொறுத்தவரை மேன் இன் இந்தியா திட்டம் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

சுருங்கிய வாய்ப்புகள்

10 ஆண்டுகளுக்கு முன்பு மென்பொருள் துறையில் அதிக எண்ணிக்கையில் பணி நியமனங்கள் நடைபெற்ற நிலையில், இப்போது தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்கிறார் நாராயண மூர்த்தி. 2014 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் 25,000 ஆக இருந்த வருடாந்திர வாய்ப்புத் தற்போது 15,000 ஆகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடவடிக்கை

கல்வி அறிவற்ற 400 மில்லியன் மக்களையும், முழுக் கல்வி அறிவு பெறாத 400 மில்லியன் பேரையும் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில், உற்பத்தி மற்றும் குறைந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார். தொழிற்சாலைகளின் அதிகாரத்துவம், ஜி.எஸ்.டி குழப்பங்களுக்கு முடிவு கட்டவேண்டும் என்று கூறியுள்ள அவர், தொழில் முனைவோருக்கு விரைவான ஒப்புதல்களை அளிக்கத் தயாராக வேண்டும் என்றார். அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் உட்கார்ந்து பேசி, வளர்ச்சியையும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு நாராயண மூர்த்திக் கேட்டுக்கொண்டார்.

சமத்துவமின்மைக்குத் தீர்வு

ஏழை, பணக்காரர்கள் என்ற இடைவெளியைக் குறைக்கச் செல்வந்தர்கள் பொறுப்பேற்க வேண்டும். இதனால் சமத்துவமின்னையால் விளையும் ஆபத்துக்களைக் குறைக்க முடியும் என்று என்கிறார் நாராயண மூர்த்தி.

எச்சரிக்கை

சமூகத்தில் வன்முறை எப்போது பரவுகிறது. மக்கள் நம்பிக்கை யார் காரணம், இதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விகள் எழுகிறது. இத்தகைய சூழலில் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பது அவசியமாகும். சமூகத்தில் உயர்மட்டத்தில் உள்ள பெரும் பணக்கார்களும், அதிகார வர்க்கமும் அமைதியை உறுதி செய்யும் பொறுப்பைத் தட்டிக்கழித்தால், வன்முறைக்கு ஆளாக நேரிடும் என நாராயண மூர்த்தி எச்சரித்துள்ளார்.

Have a great day!
Read more...

English Summary

Modi's Make In India Creates Jobs In Manufacturing Sector: Narayana Murthy