ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.. ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்தும் சியோமி!

மூன்று முக்கிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ள சீனத் தொலைப்பேசி நிறுவனமாகச் சியோமி, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் 30 விழுக்காடு பங்களிப்பைச் செலுத்தி வரும் அந்த நிறுவனம் உற்பத்தி செலவுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க இப்படியொரு முடிவுக்கு வந்துள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் சியோமியின் விலை விற்பனை மற்றும் வருவாய் கணக்கில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71 ஆகவே நீடிக்கும் பட்சத்தில் தீபாவளி விற்பனையிலும் விளைவுகளை உருவாக்கத் தயங்காது. ஆதலால் மறு மதிப்பீடு செய்யப்படும் என்று இந்தியத் தலைமை அதிகாரி ரகுரெட்டி கூறினார்.

டாலர்களில் கொள்முதல்

இந்தச் சூழலில் இந்தியாவில் உற்பத்தி செய்யும்போது விநியோகத்தின் மூலம் நுகர்வோருக்கு உரியப் பலனை வழங்க முடியும் என்று ரெட்டி தெரிவித்தார். ஆனால் பெரும்பகுதியான பாகங்கள் அமெரிக்கா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகளில் இருந்து டாலர்களில் வாங்கப்படுகிறது என்றார்.

விலைகளில் மாற்றம்

அமெரிக்காவின் டாலர் வலுவாகிக் கொண்டே சென்றால் செலவும் அதிகரிக்கும் என்று கூறிய ரெட்டி, உற்பத்தி செலவு மீதான தாக்கத்தின் அளவை வெளியிட மறுத்து விட்டார். ஆதலால் துறை சார்ந்த மதிப்பீடுகளைச் செய்யவுள்ள சியோமி, விலைகளில் திருத்தங்களையும் மேற்கொள்ளும் என்றார்.

அமெரிக்கா எழுச்சி

வங்கிகளும், இறக்குமதியாளர்களும் டாலர்களை வாங்கியதால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.96 ஆக மாறி, ஓரளவுக்கு எழுச்சி பெற்றது.சீனாவுடனான வர்த்தக மோதலால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது.

சிறிய லாபம்

வாடிக்கையாளர்களின் நீண்டகால ஆதரவைப் பெற்ற சியோமி, நிகர லாபமாக 5 சதவீதத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது. சிறிய அளவிலான லாபத்துடன் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

சியோமி முதலிடம்

உலகளவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உருவெடுத்துள்ள இந்தியா, 2018 ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டில் 20 சதவீதத்திலிருந்து 33.5 மில்லியன் யூனிட்டுகளக ஏற்றுமதி அதிகரித்தது. இதில் ஜியோமி 29.7 விழுக்காடு பங்களிப்பை உயர்த்தி முதலிடத்துக்கு வந்தது. சாம்சங் 23.9 விழுக்காடும், விவோ 12.6 சதவீதமும் வளர்ச்சியடைந்தது.

அறிமுகம்

சியோமி நிறுவனம் அண்மையில் ரெட்மி 6, ரெட்மி 6 ஏ, மற்றும் ரெட்மி புரோ ஆகிய மூன்று புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 5,999 முதல் 12,999 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த 3 மொபைல்களும் இந்தியச் சந்தையில் போட்டியிட உள்ளது நடப்பு ஆண்டில் இரண்டாவது காலாண்டைக் காட்டிலும் 3 மில்லியன் மொபைல்களாக ஏற்றுமதியை அதிகரிக்கவுள்ளது.

நேர்மை- தரம்

சியோமியின் புதிய கண்டுபிடிப்புகளான இந்த மொபைகள் நேர்மையான விலையில் வழங்கப்படுகிறது. ரெட்மி 6A மற்றும் ரெட்மி 6 ஆகியவை சந்தைக்குத் தகுதி வாய்ந்தவையாக இருக்கும் என்று தெரிவித்த ரெட்டி, ரெட்மி 6 ப்ரோ, இரண்டு கேமராக்களுடன் தரம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.

Have a great day!
Read more...

English Summary

Xiaomi Increases Smartphone Prices Due To Rupee Falls