அக்டோபர் மாதம் முதல் உங்கள் மாத பட்ஜெட் 5 - 8% வரை உயரப் போகுதாம் மக்களே!

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை ஏற்கனவே விலை உயர்ந்துள்ள நிலையில் அவை மூன்றாம் காலாண்டு முதல் கூடுதலாக 5 முதல் 8 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.

விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ள குறைந்தபட்ச ஆதார விலை, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள் விலை உயர்வு போன்றவை இந்த விலை உயர்வு காரணமாக இருக்கும்.

பிராட்டானியா இண்டஸ்ட்ரிஸ்

சுற்றுச்சூழல் நிலையானது அல்ல, எனவே அதில் உள்ள பல்வேறு சிக்கல்களைச் சரி செய்யத் தங்களது தயாரிப்புகளின் விலையினை 5 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாகப் பிஸ்கேட் உற்பத்தி நிறுவனமான பிரிடானியாவின் நிர்வாக இயக்குநர் வரும் பெரி கூறியுள்ளார்.

உச்சம்

வர இருக்கும் மூன்றாம் காலாண்டில் நடக்க இருக்கும் விலை உயர்வானது கடந்த இரண்டு ஆண்டுகளின் உச்சம் என்றும் தரவுகள் கூறுகின்றன.

காரணங்கள்

ரூபாய் மதிப்புச் சரிவு அதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு, அதே நேரம் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவை இறக்குமதியாளர்களைப் பெறும் அளவில் பாதித்து வருகிறது. பெட்ரோல் விலை நேரடியாக நுகர்பொருள் விலை உயர்வில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது.

இந்துஸ்தான் யூனிலீவர்

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனமும் தங்களது சோப்பு, ஸ்கின் கேர் மற்றும் சில பொருட்கள் மீதான விலையினை 5 முதல் 7 சதவீதம் வரை ஆகஸ்ட் மாதம் முதலே ஏற்றியுள்ளது.

பாமாயில் ஆயில்

பெட்ரோலில் இருந்து எடுக்கப்படும் அரிய பொருட்கள் பாட்டில், டியூப், பேக்கிங் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இதன் இவற்றின் விலை உயர்வது மட்டும் இல்லாமல் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாமாயில் மீது விதிக்கப்பட்டுள்ள வரி கடந்த ஒரு ஆண்டில் 30 சதவீத வரி 44 சதவீதமாகவும், ரீஃபைண்டு பாமாயில் மீதான வரி 40 சதவீதத்தில் இருந்து 54 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

From Coming Quarter Daily Products To Cost More