லட்சக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜி.எஸ்.டி.. மோடி மீது பாயும் ராகுல் காந்தி!

மொகலயா ஆட்சி காலத்தில் போர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி டெல்லி அருகே உள்ள பானிபட். பிற்காலத்தில் ஜவுளி நகரம் என்ற அறியப்பட்ட அந்தப் பானிபட், சரக்கு மற்றும் சேவை வரியால் இன்று நிலைகுலைந்து நிற்கிறது.

ஓராண்டுகளுக்கு முன்பு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியபோது வாழ்க்கை இருண்டு போகும் என நெசவாளர்கள் எதிர்பார்க்கவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டபோதும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தபோதும்தான் நேரடியாக உணர்ந்தார்கள். தலைநகர் டெல்லிக்கு சில கல்மைல் தூரத்தில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பானிபட் இப்போது பொலிவிழந்திருக்கிறது. திலக் ராஜ் சௌதா என்ற நெசவாலையிலும், அதற்குப் பக்கத்தில் இருந்த ஆலைகளிலும் ஆட்களைத் தவிர விலங்கினங்கள் அதிகம் நடமாடுகின்றன.

வஞ்சித்த ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டியின் வரிக்கொள்கைகளும், விதிமுறைகளும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியது. படிப்பறிவற்ற நெசவாளர்கள் வரிச் செலுத்துவதில் இருந்த குழப்பங்களால் திண்டாடிப் போனார்கள். ஜி.எஸ்.டி குழப்பத்துக்குத் தீர்வு காண 200 க்கும் மேற்பட்ட திருத்தங்களை அரசு கொண்டு வந்தது. ஆயினும் கணினியில் ஏற்பட்ட மென் பொருள் குறைபாடுகளும், தொழில்நுட்பக் கோளாறுகளும் வஞ்சித்து விட்டது என்கிறார் திலக் ராஜ் பாத்லா தொழிலாளர்.

இழப்பு

ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தாகக் கூறும் நெசவாலை உரிமையாளர், தற்போது 2,50,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார். தனக்குச் சொந்தமான 10 விசைத்தறிகளில் 8 ஐ மூடி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

உறுதி

ஜி.எஸ்.டி வரிச் செலுத்தும் முறையில் உள்ள குறைகள் களையப்படும் என நிதி அமைச்சக செய்தி தொடர்பாளர் மாலிக் கூறினார். ஆனால் வேலையிழப்பு குறித்து வாய்திறக்க மறுத்து விட்டார்.

வளர்ச்சி - ஆனால் வீழ்ச்சி

ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 8.2 சதவீதமாக வளர்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம், முந்தைய ஆண்டில் 5.6 விழுக்காடாக இருந்தது. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உற்பத்தித்துறை எழுச்சி கண்டது. ஏனென்றால் பெரிய நிறுவனங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சிறிய நிறுவனங்கள் தான் வரிச் சீர்திருத்தத்தில் வதைபட்டன.

சரிந்த லாபம்

அகில இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், 63 பில்லியன் சிறிய நிறுவனங்கள், இந்திய பொருளாதார வளர்ச்சியில் 32 சதவீதம் பங்களிப்பை செலுத்தியதாகக் கூறியுள்ளது. 111 பில்லியன் தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகத் தெரிவித்துள்ள அந்த ஆய்வு, ஜி.எஸ்.டிக்குப் பிறகு, லாபம் 20 விழுக்காடு சரிந்ததோடு வேலையிழப்பும் கணிசமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

வேலையின்மை

ஆயத்த ஆடைகள், கற்கள், நகைகள், தோல், கைவினைப் பொருட்கள் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டன. இதனால் கடந்த ஆண்டு மட்டும்
5 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழந்தனர் எனச் சென்டர் ஆப் மானிட்டரிங் இந்தியா தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் 4.1 விழுக்காடாக இருந்த வேலையின்மை ஆகஸ்ட்டில் 6.4 ஆக அதிகரித்ததாகக் கூறியுள்ளது.
2015-16 இல் 5 விழுக்காடு வேலையின்மை இருந்ததாகக் கூறும் தொழிலாளர் நலத்துறை, பானிட்டில் மட்டும் 10 ஆயிரம் ஆலைகள் மூடப்பட்டதாக ஒத்துக் கொண்டுள்ளது.

மூடப்பட்ட நிறுவனங்கள்

ஜி.எஸ்.டி வரி செலுத்திய 2 பில்லியன் பேருக்கு ரீபண்ட் வழங்கவில்லை என்று கூறியுள்ளது இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு. 2,30,000 நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் லட்சக்கணக்கானோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் தொழிலாளர் கூட்டமைப்பின் அமர்ஜித் குமார் தெரிவித்தார்.

வாய்ச்சவடால்- எதிர்ப்பு

நிலைமை இவ்வாறு இருக்கச் சுந்திர தின உரையில் பேசிய பிரதமர் மோடி, ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட சவால்களை மக்கள் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். இதனைக் கடுமையாகச் சாடி வரும் ராகுல்காந்தி, ஏழைகளின் சட்டைப்பையில் இருந்து பணத்தை அகற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். கபீர் சிங் வரி எனச் சித்தரிக்கும் அவர், மோடியை திரைப்படங்களில் வரும் வில்லனாக உருவகப்படுத்தியுள்ளார்.

தொடரும் பாதிப்பு

நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி வரியால் பொருட்களின் விலை 10 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்ந்துள்ளது, கார், விளையாட்டுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதுபோன்ற இன்னபிற விலைவாசி உயர்வுகளால் பொதுமக்களும் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதேநேரம் பெட்ரோல், டீசலும், ஆயத்தீர்வையும் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரவில்லை.

Have a great day!
Read more...

English Summary

GST Sent Lakhs Of Labours To Home. Rahul Slams Modi