அடேங்கப்பா.. ஆண்டுக்கு ரூ. 5,000 கோடியை எல்ஐசி-க்கு பரிசாக அளிக்கும் பாலிசிதாரர்கள்!

சென்னை: இந்தியர்கள் எல்ஐசி பாலிசி தங்களை நம்பி இருப்பவர்களின் நிதி சிக்கலை நாம் இல்லாதபோது போதும் தீற்க்க உதவும் என்று தெரிந்து இருந்தாலும் 'நீ எல்ஐசி பாலிசியை விற்பதற்காக என்னை சாக சொல்கிறாயா' என்றும் கேட்பார்கள்.

சிலர் நாம் இல்லாத போது நமது குடும்பம் கஷ்டப்படகூடாது அல்லது ஒரு சேமிப்பாக இருக்கட்டும் என்று முதலீடு செய்தாலும் அதில் 25 சதவீத்தினர் முதல் வருட தவணைக்கு பிறகு பாலிசிக்கான் பிரீமியத்தினை செலுத்துவதில்லை என்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

ஐஆர்டிஏஐ

இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமான ஐஆர்டிஏஐ எல்ஐசி-ல் 2017-ம் ஆண்டு 64 சதவீத பாலிசிதார்கள் காப்பீட்டினை பெற்றதாகவும் ஆனால் அதில் 36 சதவீதத்தினர் முதல் வருடத்திற்குப் பிறகு தடாவில்லை என்று தெரிவித்துள்ளது. இதுவே 2018-ம் சற்று குறைந்து பாலிசியைப் புதுப்பிப்பவர்களின் எண்ணிக்கை 64 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.

எல்ஐசி

இது குறித்து எல்ஐசி அலுவலகத்தினைத் தொடர்புக்கொன்று விசாரித்த போது குறைந்த மதிப்புடைய பாலிசிகளில் தான் இந்த நிலை என்றும் ஆனால் 76 சதவீதத்தினர் 2-ம் வருடம் பாலிசிகளைப் புதுப்பிக்கின்றனர் என்றார்.

பொதுவாகக் காப்பீட்டை பெற்ற பிற ஒரு வருடம் கூடப் பாலிசியைத் தொடரவில்லை என்றால் அது வரை செலுத்தப்பட்ட மொத்த பணத்தினையும் கூட இழக்க நேரிடும் என்று அந்த அதிகாரி நம்மிடம் தெரிவித்தார்.

 

பரிசாக அளிக்கப்படும் 5000 ரூபாய்

2016-2017 நிதி ஆண்டில் எல்ஐசி 22,718 கோடி ரூபாய் மதிப்பிலான பாலிசிகளை விற்ற நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாலிசிதாரர்கள் அதனைத் தொடரவில்லை என்று தெரிவித்துள்ளது. இது எல்ஐசியில் மட்டும் என்பதால் பிற நிறுவனங்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கும் போல.

ஏன் இந்த நிலை?

பாலிசியை வாங்கியவர்கள் அதனைத் தொடர்ந்து நிராகிரிக்காமல் இடையில் வெளியேறக் காரணம் முகவர்கள் தவறான தகவல்களை அளித்துப் பாலிசிகளை விற்று தங்களது இலக்கினை முடிக்க முயல்வதே காரணம் என்று துறை சார்ந்த வால்லுனர்கள் கூறுகின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

ரிஸ்க் என்று ஒப்புக்கொள்ளும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களை விடக் காப்பீடு நிறுவனங்களின் வளர்ச்சி வேகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் கூறுகின்றனர். எனவே காப்பீடு பாலிசிகளை வாங்கும் முன்பு எத்தனை வருடங்கள் தொடர்ந்து பிரீமியம் செலுத்த வேண்டும், நன்மைகள் என்னென்ன, தொடர்ந்து இதனை வருடங்கள் நம்மால் பாலிசியைத் தொடர முடியுமா என்று எல்லாம் முடிவு செய்துவிட்டுக் காப்பீட்டை வாங்க வேண்டும். இல்லை என்றால் அதனைத் தவிர்த்துவிட்டு அதற்கேற்ற சூழலை உருவாக்கிக்கொண்டு முதலீடுகளைத் தொடர்வது நல்லது.

Have a great day!
Read more...

English Summary

How Indians Gifts RS 5000 Cr To Life Insurance Corporation Every year