ஐஆர்சிடிசி பெயர் விரைவில் மாறும்.. பியூஷ் கோயல் அதிரடி!

இந்தியன் ரயில்வே டூரிசம் மற்றும் காப்ரேஷன் நிறுவனமான ஐஆர்சிடிசி மூலம் பயணிகள் ரயில் டிக்கெட், விமான டிக்கெட் போன்றவற்றைப் புக் செய்து பெற்று வருகிறனர். தற்போது இதில் முக்கிய மாற்றத்தினை இந்திய ரயில்வேஸ் செய்ய உள்ளது.

ஐஆர்சிடிசி என்ற பெயரினை உங்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லையா? ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு இதுபோன்று நடந்து இருக்கும் போல.

பியூஷ் கோயல்

எனவே பியூஷ் கோயல் ஐஆர்சிடிசி பெயரினை மாற்ற சிறந்த பெயர் பட்டியலினை கொண்டு வாருங்கள் என்று இந்தியன் ரயில்வேஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப் பெயர் எளிதல் மனதில் நினைவுக்கு வருமாறு இருக்க வேண்டும் என்றும் எளிமையான உச்சரிப்பாக இருக்க வேண்டும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஐடியா மணி

ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பெயரினை இந்தியன் ரயில்வேஸ் மாற்ற முயல்வது இது முதல் முறை அல்ல. ஒரு வருடத்திற்கு முன்பே mygov.in என்ற இணையதளத்தில் ஐஆர்சிடிசிக்கு புதிய பெயர்கள் அளிக என்று விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அப்போது இதற்கு 1852 நபர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கி இருந்தனர்.

தேர்வு செய்யப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை

முதற்கட்டமாக அந்தப் பெயர்களை ஆய்வு செய்து 700 பெயர்களைத் தேர்ந்தெடுத்து இருந்தனர். தற்போது இரண்டாவது லெவலை அடைந்துள்ள இந்தப் பெயர் தேர்வானது அந்த 700-ல் இருந்து ஒரு பெயரினை தேர்வு செய்ய உள்ளனர் என்று ஐஆர்சிடிசி அதிகாரிகள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்தனர்.

புதிய பெயர் மாற்றம் எப்போது நிகழும்?

ஐஆர்சிடிசியின் புதிய பெயர் தேர்வு 2 மாதத்திற்குள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் இதில் வெற்றி பெற்ற பெயரை வழங்கியவருக்கு 1,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி இணையதளத்தில் தினமும் 5,73,000 ரயில் டிக்கெட்கள் புக் செய்யப்படுகிறது. 3 கோடி நபர்களுக்கும் அதிகமானவர்கள் இந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். அன்மையில் தான் ஐஆர்சிடிசி தங்களது இணையதளத்தினைப் புதிய வடிவத்தில் மாற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

IRCTC TO Get New Name Soon: Piyush Goyal