அடல் பென்ஷன் யொஜனாவில் செய்யப்பட்ட புதிய மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை!

பிரதமர் நரேந்திர மோடி தனியார் ஊழியர்களும் ஓய்வுக்குப் பிறகு மாத பென்ஷன் அளிக்கக் கூடிய அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தினை 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்தார்.

இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பினை அடுத்து காலவரையின்றி இந்தத் திட்டத்தினைப் பெறக்கூடியதாக மாற்றியுள்ளனர். விபத்துக் காலங்களில் வழங்கப்படும் காப்பீடு தொகையினை இரட்டிப்பாகியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் வயது வரம்பினையும் கூடுதலாக 5 ஆண்டுகள் வரை நீட்டித்துள்ளனர். எனவே புதிய மாற்றம் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

அடல் பெஷன் யோஜனா

அடல் பெஷன் யோஜனா திட்டம் கீழ் மாதம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும். இதற்கு நாம் அரசு வேலை பணிபுரிந்து இருக்க வேண்டும் என்றில்லை. வேலைக்குச் செல்லாம் விட்டில் உள்ள இல்ல தரசிகளும் இந்தத் திட்டம் கீழ் சேர்ந்து முதலீட்டினை துவங்கலாம்.

முதலீட்டாளர்கள்

தற்போது அடல் பென்ஷன் யோஜனா திட்டம் கீழ் 10 மில்லியன் மக்களுக்கும் அதிகாமானவர்களால் முதலீடு செய்துள்ள நிலையில் அதனை மேலும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வயது வரம்பு

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 18 முதல் 60 வயது வரையில் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்று இருந்த நிலையில் அதனை 65 வயது வரை நீட்டித்துள்ளனர்.

இன்சூரன்ஸ்

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் கணக்கை நிர்வகிப்பவர்களுக்கு 1 லட்சம் வரை விபத்து காப்பீடு இருந்த நிலையில் ஆகஸ்ட் 28-க்குப் பிறகு முதலீட்டைத் துவங்கியவர்களுக்கு 2 லட்சமாக உயர்த்தியுள்ளனர்.

ஏமாற்றம்

தற்போது 1000 முதல் 5000 ரூபாய் வரையில் மட்டுமே இந்தத் திட்டம் கீழ் சேமிப்பவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற நிலையில் அதனை 10,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஜன் தன் யோஜனா

இதே போன்ற மாற்றங்களை ஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்குகளில் மத்திய அரசு செய்தது மட்டும் இல்லாமல் ஓவர் டிராப்ட் வரம்பினை 5000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

ஒய்வூதியம்

மாதம் வெறும் ரூ.84 முதலீட்டில் வருடத்திற்கு ரூ.24,000 பென்ஷன்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!

 

 

Have a great day!
Read more...

English Summary

New Changes In Atal Pension Yojana: Things To KnoW