சென்செக்ஸ் 64 புள்ளிகளும், நிப்டி 11,524 புள்ளியாகவும் சரிவு!

சர்வதேச சந்தையில் உள்ள பதற்றமான சூழலால் இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் காலை வர்த்தகத்தில் சரிந்து காணப்படுகிறது.

நேற்று பங்கு சந்தை ஒரு வாரமாகச் சர்ந்து வந்ததில் இருந்து மீண்ட நிலை இன்று மீண்டு சரிவை நோக்கி சென்றுள்ளது. காலை 10:10 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 63.79 புள்ளிகள் என 0.17 சதவீதம் சரிந்து 38,179.72 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிபிடி 13.50 புள்ளிகள் என 11,523.40 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

காலை முதல் பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், விப்ரோ, மஹிந்தரா & மஹிந்தரா, கோல் இந்தியா பங்குகளை அதிகளவில் முதலீட்டாளர்கள் வாங்கி வரும் நிலையில் சன் பார்மா யெஸ் வங்கி, பவர் கிரிட், எஸ்பிஐ வங்கி, மாருதி, ஓஎன்ஜிசி பங்குகளை அதிகளவில் விற்று வருகின்றனர்.

வியாழக்கிழமை சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 455 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறிய நிலையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 611.98 கோடி ரூபாய்க்குப் பங்குகளை வாங்கியுள்ளனர். வெளிநாட்டு முதலீடுகள் சரிவுக்கு முக்கியக் காரணம் ரூபாய் மதிப்பு சரிவே ஆகும்.

Have a great day!
Read more...

English Summary

Sensex, Nifty Falls In Today Market