இதை செய்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து விடலாம்.. என்ன தெரியுமா?

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒரு புறம் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளின் கண்மூடித்தனமான வரி விதிப்புகளே
பெட்ரோல், டீசல் விலையின் வரலாறு காணாத உயர்வுக்குக் காரணமாகியிருக்கின்றன.

பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரி மூலம் மத்திய அரசுக்கு 10 லட்சம்
கோடி ரூபாய் வருவாய்க் கிடைக்கிறது. வருவாயில் துண்டு விழாமல் வரியைக்
குறைக்குமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 83.13 காசுகளைத் தொட்டுள்ள பெட்ரோல் விலை, எப்போது வேண்டுமானாலும் 90 ரூபாயைத் எட்டலாம். அதே நேரம் டீசல் 76.17 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது.

ரூபாய் மதிப்பு

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதாள வீழ்ச்சியைச் சந்தித்து, 72 ஆக இருக்கிறது. இதற்கு இந்தியா பொறுப்பில்லை என்று கூறும் நிதிமந்திரி அருண்ஜேட்லி, உலகளாவிய பிரச்சினையாக்கியிருக்கிறார்.

உன்மை நிலவரம்

ஆனால் இது உலகளாவிய பிரச்சினை இல்லை,இந்தியா ஏற்படுத்திய வானளாவிய பிரச்சினை என்கிறது உண்மை நிலவரம். பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு 10 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதிக்கிறது.2014_15 இல் 1.5 லட்சம் கோடியாக அதிகரித்த இந்த வரி வருவாய், 2018-19 இல் 2.57 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

வரி உயர்வு

முந்தைய ஆண்டுகளைப்போலவே நுகர்வு சராசரியாக இருக்கும்போது, வரி விதிப்பு மட்டும் கணிசமாக உயர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. டீலர் கமிஷன்,மத்திய, மாநில அரசுகளின் வரி 2013 இல் இருந்ததை விடக் கணிசமாக உயர்ந்துள்ளது. வரி விதிப்புக்கு முன் இருந்த நிலையே தொடர்ந்தால், பெட்ரோல் டீசல் விலை குறையும்.

Have a great day!
Read more...

English Summary

Is Central Govt Will Do This To Reduce Petrol, Diesel Price