வங்கி மோசடி குறித்து தாமதமாக புகார்.. 3 வங்கிகள் மீது 1 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ!

இந்திய பொதுத் துறை வங்கிகள் கடனை அளித்து விட்டு ஏமார்ந்து நிற்பது தொடர் கதையாகி உள்ள நிலையில் வங்கி மோசடி குறித்துத் தாமதமாகப் புகார் அளித்ததாக மூன்று பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் மீது தலா 1 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா உள்ளிட்ட வங்கிகளே மோசடி குறித்துத் தாமதமாகப் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ

மோசடி குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில் இருந்தவற்றை இந்த மூன்று வங்கிகளும் பின் பற்றவில்லை என்பதால் 10 மில்லியன் ரூபாய் அபராதத்தினை விதித்ததாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரங்களின் படி வங்கி ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 47A (1) (c), 46 (4) (i) தாமதமாக மோசடி குறித்து வங்கிகள் புகார் அளித்துள்ளன என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

என்ன மோசடி?

மோசடி குறித்துத் தாமதமாக வங்கிகள் அளித்த புகார் என்று ஆர்பிஐ கூறியிருந்தாலும் அது என்ன மாதிரியான மோசடி என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

வங்கி மோசடிகள்

கிங்பிஷர் நிறுவனரான விஜய் மல்லையா 9,000 கோடி ரூபாயும், நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி 13,000 ரூபாயும் மோசடி செய்துள்ள நிலையில் இது போன்ற வங்கி மோசடி செய்திகள் தொடர்ந்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

அச்சம் வேண்டாம்

இது போன்ற வங்கி மோசடிகள் குறித்துக் கவலைப்பட வேண்டும், இந்தப் பணத்தினை வங்கி கட்டணங்கள் மற்றும் பிற சேவைகள் மூலம் வங்கிகள் எளிதாகத் திரும்பப் பெற்றுவிடும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே நேரம் சென்ற ஆண்டு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொதுத் துறை வங்கிகளின் மறு மூலத்திற்காக 2.11 லட்சம் கோடி ரூபாய் அளிப்பதாக உறுதி அளித்தது மட்டும் இல்லாமல் அதில்2 தவணையினை அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

RBI Fined 3 Public Sector Banks For Delay In Fraud Detection