நாடு எங்கே சார் போகுது.. ஒரே மாதத்தில் ரூ. 1.18 கோடிக்கு செக்ஸ் டாய்ஸ் வாங்கி குவித்த பெண்கள்!

டெல்லி: சமீபத்தில் வெளியான சில, ஹிந்தி திரைப்படங்களில் பெண்கள், டில்டோ எனப்படும் சுய இன்பம் செய்யும் கருவிகளை பெண்கள் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் வெளியான பிறகு, நாட்டில் செக்ஸ் டாய்ஸ் விற்பனை 44 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாம்.

ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் ஜானர் காமெடி படங்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வந்துவிட்ட நிலையில், பாலிவுட்டோ இன்னும் அட்வான்ஸாக போய்விட்டது.

கடந்த ஜூன் மாதம் வீரே தி வெட்டிங் திரைப்படம் வெளியாகியிருந்தது. இது செக்ஸ் இன் தி சிட்டி என்ற எபிசோடின் இந்திய வெர்ஷன் என வர்ணிக்கப்பட்டது.

வைப்ரேட்டர்

நான்கு தோழிகள் மற்றும் அவர்கள் வாழ்க்கையை கூறியது இந்த படம். கரீன கபூர் கான், சோன் கபூர் ஆகுஜா, ஸ்வரா பாஸ்கர் மற்றும் ஷிகா தல்சானியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடத்திருந்தனர். இதில் ஸ்வரா தனது உடல் இன்ப தேவைக்காக வைப்ரேட்டரை பயன்படுத்துவதை போன்ற காட்சி உண்டு.

பல படங்கள்

அந்த படம் மட்டுமே கிடையாது. இதுபோன்ற காட்சிகளுடன் வந்த நெட்பிளிக்ஸ் படம், லஸ்ட் ஸ்டோரீஸ். அதிலும் காமெடியான ஒரு சுய இன்ப காட்சி உள்ளது. ஜூன் மாதம் 15ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. கரன் ஜோகர் உள்ளிட்டோர் இயக்கத்தில், 4 பெண்களின் காதல், செக்ஸ் மற்றும் உறவுகள் குறித்த கோணத்தை முன் வைத்தது இந்த படம்.

பெண்களை மையப்படுத்தியது

லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்தில், கியாரா அத்வானி மற்றும் நேஹா துபியா ஆகியோர் செக்ஸ் உபகரணம் வைத்து சுய இன்பம் செய்வது போன்ற தனித்தனி காட்சிகள் இருந்தன. லிப்ஸ்ட்டிக் அன்டர் புர்கா படமும் இதுபோன்ற ஜானரில் வெளியானது. பாலிவுட்டில் முதல் முறையாக பெண்கள் ஆர்கசம் அடையும் காட்சிகளை வெளிப்படையாக காண்பித்தது இப்போதுதான் என்பது கவனிக்கத்தக்கது.

விற்பனை அதிகரிப்பு

இந்த நிலையில்தான், ஆன்லைனில் செக்ஸ் பொம்மைகள் வாங்கும் பெண்கள் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறுகிறது ஆய்வுகள். மேற்சொன்ன படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகைகளின் தாக்கமும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஜூன் மாதத்தில்தான் மிக அதிக அளவுக்கு பெண்களுக்கான, செக்ஸ் பொம்மைகள், உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

அடேங்கப்பா சேல்ஸ்

ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், ஆன்லைன் மூலமாக 1,78,99,775 ரூபாய் மதிப்பிலான பெண்களுக்கான செக்ஸ் கருவிகள் விற்பனை நடைபெற்றிருந்தது. ஆனால், ஜூன் மாதத்தில் மட்டும், 1,18,99,346 கோடி ரூபாய்க்கு இவை விற்பனையாகியுள்ளன என்கிறது புள்ளி விவரம்.

சமீபத்தில் வெளியான சில, ஹிந்தி திரைப்படங்களில் பெண்கள், டில்டோ எனப்படும் சுய இன்பம் செய்யும் கருவிகளை பெண்கள் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் வெளியான பிறகு, நாட்டில் செக்ஸ் டாய்ஸ் விற்பனை 44 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாம். ஜூன் மாதத்தில் மட்டும், 1,18,99,346 கோடி ரூபாய்க்கு இவை விற்பனையாகியுள்ளன என்கிறது புள்ளி விவரம். பாலிவுட் படங்களின் தாக்கம்தான் முக்கிய காரணமாம்.

 

Have a great day!
Read more...

English Summary

Sex toys for women sales going up in India