கடைசில கடன்காரங்களா ஆக்கிட்டீங்களே.. சர்ரென சரியும் ரூபாய் மதிப்பால் விர்ரென ஏறிய வெளிநாட்டு கடன்!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே இருப்பதால், வெளிநாடுகளில் வாங்கிய குறுகிய கடன்களுக்கு 70,000 கோடி ரூபாயைக் கூடுதலாகச் செலவிட நேரும் என ஆய்வுகள் கூறுகின்றன.

எப்போதும் இல்லாத அளவுக்குப் பணமதிப்பு 11 விழுக்காட்டுக்கு மேல் வீழ்ச்சி கண்டதால், திருப்பிச் செலுத்தும் கடன்களும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த வியாழக்கிழமை 72 ஆகச் சரிந்தது. இதனால் நடப்பு கணக்குப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. டாலர் மதிப்பு 73 ஆக உயரும்பட்சத்தில், ஒரு பீப்பாய் பெட்ரோல் 76 விற்பனையானால் எண்ணெய் இறக்குமதிக்கு 45,700 கோடி ரூபாய் செலவிட நேரும் எனப் பொருளாதார வல்லுநர் சவுமிய கந்தி கோஷ் கூறியுள்ளார்.

என்ஆர்ஐ

வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகள் மற்றும் வர்த்தகக் கடன்கள் ஆகியவை 2017 ஆம் ஆண்டில் 217.6 பில்லியன் டாலராக இருந்தது. இந்தக் குறுகிய காலக் கடனில் 50 சதவீதத்தை நடப்பு ஆண்டின் முதல் பாதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ செலுத்தும்போது, கடந்த ஆண்டு டாலர் மதிப்பில் 7.1 டிரில்லியன் ரூபாயாக மதிப்பிடப்படும்.

கடன் அதிகரிப்பு

டாலரின் சராசரி மதிப்பு 71.4 ரூபாயாக இருக்கும் இந்தச் சூழலில், ஆண்டின் 2 வது பாதியில் கடனைத் திருப்பிச் செலுத்தினால், கடன் தொகை 780 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், இது 70,000 கோடி ரூபாய் கூடுதல் செலவுக்கு வித்திடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Weak rupee to cost India Rs 70000 Crore more to repay foreign debt