2,500 ஊழியர்களை வெளியேற்றி 10 பில்லியன் டாலரை சேமிக்க விரும்பும் வோடாபோன் ஐடியா..!

வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு வெற்றிகரமாக இணைந்ததை அடுத்து ஊழியர்களின் அளவினை குறைத்து ஆண்டுக்கு 10 பில்லியன் டாலரினை சேமிக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

தற்போது வோடாபோன் இந்தியாவில் 17,500 ஊழியர்களும், அடியாவில் 18,000 ஊழியர்களும் உள்ள நிலையில் தலா 2,500 நபர்களை வோடாபோன் ஐடியா வெளியேற்ற வாய்ப்புகள் உள்ளது.

தாய் நிறுவனங்களில் வேலை

இரண்டு நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட இருக்கும் சில ஊழியர்களுக்கு அதன் தாய் நிறுவனமான வோடாபோன் குழுமம் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டாலும் பலர் வேலையை இழக்க நேரிடும்.

ஓய்வு தொகை

பணி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு அடுத்த வேலையை அவர்கள் தேர்வு செய்யும் வரை குடும்பத்தினைக் கவனிக்க ஏற்ற அளவிலான ஓய்வு தொகை அளிக்கப்படும் என்றும் இது குறித்து விவரம் அறிந்த ஊழியர்கள் நம்முடன் பரிந்துகொண்டனர்.

உதிய உயர்வு நிறுத்தம்

அது மட்டும் இல்லாமல் இரண்டு நிறுவனங்களும் தற்போது தான் இணைந்துள்ளது என்பதால் இப்போதைக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவை அளிக்கப்படாது என்று நிறுவனங்களிடம் இருந்து வரும் தகவல்கள் கூறுவதாகம் தெரிவித்தனர்.

ஊழியர்கள் - சேமிப்பு

வோடாபோன் ஐடியா என்ற பெயர் பெற்றத்தினை அடுத்து இரண்டு நிறுவன ஊழியர்களும் ஒரே மாதிரியான நன்மைகளைப் பெறும் படியும் திருத்தங்கள் செய்து வருகின்றனர். பிற நிறுவனங்களைப் போன்றே புதிதாக உருவெடுத்துள்ள இவர்களும் ஊழியர்கள் குறைப்பு மூலம் செலவினை குறைத்துச் சேமிக்க முடிவு செய்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

After Merger Vodafone Idea's $10-billion saving plan could cost 2,500 jobs