இந்த வாரம் செப்டம்பர் 10 முதல் 14 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்!

சந்தை வெள்ளிக்கிழமை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 147.01 புள்ளிகள் என 0.38 சதவீதம் உயர்ந்து 38,389.82 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 52.50 புள்ளிகள் என 0.45 சதவீதம் உயர்ந்து 11,589.10 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

ரூபாய் மதிப்புச் சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்படைந்து வரும் நிலையில் இந்த வாரம் செப்டம்பர் 10 முதல் 14 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம் என்று இங்குப் பார்க்கலாம்.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் பங்குகளை 614 முதல் 619 ரூபாய்க்குள் இருக்கும் போது வாங்கலாம் என்றும், டார்கெட் 635 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 604 ரூபாய் என்றும் வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்ரீஸ்

டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்ரீஸ் பங்குகளை 2,610 முதல் 2,634 ரூபாய்க்குள் இருக்கும் போது வாங்கலாம் என்றும், டார்கெட் 2,712 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 2,562 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஹீரோ மோட்டோ கார்ப்

ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகளை 3,300 முதல் 3,330 ரூபாய்க்குள் இருக்கும் போது வாங்கலாம் என்றும் டார்கெட் 3,4455 ரூபாய் என்றும் ,ஸ்டாப் லாஸ் 3,223 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

JSW ஸ்டீல்

JSW ஸ்டீல் நிறுவன பங்குகளை 403 முதல் 407 ரூபாய்க்குள் இருக்கும் போது வாங்கலாம் என்றும் டார்கெட் 422 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 394 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மணப்புரம் பைனான்ஸ்

மணப்புரம் ஃபைனாஸ் பங்குகளை இந்த ஆரம் விற்கலாம் என்றும் ரேஞ் 96 முதல் 98 ரூபாய் என்றும் டார்கெட் 95 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 98.45 ரூபாய் என்றும் வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறிப்பு

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

Have a great day!
Read more...

English Summary

Best Stock Picks Between 10th to 14th September, 2018