காரில் இரத்த கரை.. காணாமல் போன எச்டிஎப்சி வங்கியின் துணை தலைவர்!

எச்டிஎப்சி வங்கியின் துணை தலைவரான சித்தார்த் சாங்வி செப்டம்பர் 5-ம் தேதி மும்பை கமாலா மில்ஸில் உள்ள தங்களது அலுவலகத்தில் இருந்து கிளம்பிய பிறகு காணவில்லை.

இவரது கார் மட்டும் சனிக்கிழமை மும்பை - பூனே சாலையில் உள்ள கோப்பர் கர்னேவில் கிடைத்துள்ளது.

சித்தார்த் சாங்வி

39 வயதான சித்தார்த் சாங்வி கமலா மில்ஸ் எச்டிபெசி வங்கி அலுவலகத்தில் இருந்து மாலை 7:30 மணியளவில் தனது காரில் கிளம்பியுள்ளார். அதன் பின்னர் என்ன ஆனார் என்ற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

புகார்

புதன் கிழமை நள்ளிரவு வரை சாங்வி வீட்டிற்கு வராததால் அவர் அலுவலகம், மொபைல் எண் போன்றவற்றைத் தொடர்புகொண்டும் எந்தத் தகவலும் கிடைக்காததால் என் எம் ஜோஷி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணை

இதைத் தொடர்ந்து புகாரினை பதிவு செய்த காவல் துறையினர் சித்தார்த் சாங்வி தேடி வந்த நிலையில் மும்பை - புனே சாலையில் உள்ள கோப்பர் கர்னேவில் இருந்துள்ளது. அதனைச் சோதனை செய்த போதில் அதில் இரத்த கரைகள் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எச்டிஎப்சி வங்கி

இது குறித்து எச்டிஎப்சி வங்கியின் மூத்த நிர்வாகி ஒருவரை தொடர்புகொண்டு கேட்ட போது எதிர்பாராத விதமாக இப்படி நடந்துள்ளது, இதை அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். காவல் துறை விசாரணைக்கு எங்கள் முழு ஒத்துழைப்பையும் அளித்து வருவதாகவும் கூறினார்.

Have a great day!
Read more...

English Summary

HDFC Bank Vice President Missing For Four days, Car Found With Blood Stains Traced