ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகிறார் எச்டிஎப்சி -ன் முக்கிய அதிகாரி!

ஆக்சிஸ் வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அமிதாப் சவுதிரியை ஜனவரி 1 முதல் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளது.

அமிதாப் சவுதிரியின் ஆக்சிஸ் வங்கியின் இந்தப் பதவி காலம் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும் என்றும் அதன் பிறகு தொடரப்படுமா என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

அமிதாப் சவுதிரி - ஷிக்க ஷர்மா

எச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநர் டிசம்பர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் சவுதிரி உள்ளார். தற்போது ஷிக்கா ஷர்மா ஆக்சிஸ் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குநராக உள்ள நிலையில் இவரது பதவி காலம் 2018 டிசம்பர் 1-ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஆர்பிஐ -ஆக்சிஸ் வங்கி

ஆரிபிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி போர்டு உறுப்பினர்கள் இடையிலான கூட்டத்தில் அமிதாப் சவுதிரியை 2019 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 வரை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மும்பை பங்கு சண்டைக்குத் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அமிதாப் சவுதிரி

அமிதாப் சவுதிரி எச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் 2010-ம் ஆண்டு முதவில் உள்ளார். இந்நிலையில் ஆர்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி போர்டு உறுப்பினர்கள் எனக்கு இந்தத் தலைமை பொறுப்பினை அளித்தமைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

ஷிக்கா ஷர்மா

சென்ற ஏப்ரல் மாதம் ஆக்சிஸ் வங்கி போர்டு உறுப்பினர் குழு ஷிக்கா சர்மாவின் 4-ம் காலத் தலைவர் பதவியினை 7 மாதமாகக் குறைத்தது.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஷிக்கா சர்மாவின் பதவி காலத்தினை நீட்டித்து அறிவித்த நிலையில் 2018 ஜூன் முதல் 4-ம் முறை இந்தப் பதவி காலத்தினைப் பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Have a great day!
Read more...

English Summary

HDFC Standard Life's Amitabh Chaudhry To Lead Axis Bank From January 1