பிளிப்கார்ட் - வால்மார்ட் டீலில் ரூ.10,000 கோடியை அறுவடை செய்த அரசு!

பெங்களூரு: ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டை வசப்படுத்திய வால்மார்ட் நிறுவனத்தின் மூலம், அரசுக்கு 10,000 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கியது. அப்போது நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துமாறு அரசு கெடு விதித்திருந்தது.

வால்மார்ட் முடிவு

புதிய முதலீடான 2 பில்லியன் டாலர் உள்பட 16 பில்லியனுக்கு கூடுதலான பரிவர்த்தனைக்கு ஈடு செய்ய முடியாத நிச்சமில்லாத வரிகளை முடிவுக்கு கொண்டு வர வால்மார்ட் தீர்மானித்தது. இதன் விளைவாக 14 பில்லியன் மதிப்பிடப்பட்ட பங்கு விற்பனையின் அடிப்படையில் வரி செலுத்தியுள்ளது.

வால்மார்ட் தகவல்

நிலுவையில் இருந்த வரிகளைச் செலுத்திவிட்டதாக உறுதி செய்துள்ள வால்மார்ட் நிறுவனம், செலுத்தப்பட்ட தொகை குறித்துத் தெரிவிக்க மறுத்து விட்டது. சட்டப்பூர்வமான கடமைகளை ஏற்றுக் கொண்டதால், வருமான வரித்துறையின் விதிமுறைகளின் படி நிலுவையில் இருந்த தொகை செலுத்தப்பட்டதாக வால்மார்ட் செய்தி தொடர்பாளர் கூறினார்.

மறுப்பு

வருமான வரித் துறையின் அயலக வரித்துறை பிரிவின் தலைவர் அகிலேஷ் ரஞ்சனிடம் பேசிய வால்மார்ட் பிரதிநிதிகள், வரியை செலுத்த அவகாசத்தை நீடிக்குமாறு கேட்டனர். ஆனால் இதனை மறுத்த அவர், செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் வரியை செலுத்துமாறு கூறியிருந்தார்.

அறுவடை

வோடபோன் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் மீண்டும் நிகழ்ந்து விடாதபடி ஜாக்கிரதையாகச் செயல்பட்ட அரசு, வால்மார்ட் நிறுவனத்திடம் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாயை அறுவடை செய்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Indian Government Got Rs 10,000 Crore Tax Bonanza From Flipkart Deal