பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ராஜஸ்தான் முதல்வர் செய்ததை எடப்பாடி செய்வாரா?

ராஜஸ்தான் முதல்வரான வசுந்தரா ராஜே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையினைக் குறைக்க மதிப்புக் கூட்டு வரியான வாட்டினை 4 சதவீதம் புள்ளிகளைக் குறைத்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.5 ரூபாய் வரை குறையும்.

Advertisement

பெட்ரோல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 22 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைப்பதாக இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

Advertisement

ராஜஸ்தான் அரசின் இந்த முடிவால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை 2.5 ரூபாய் வரை குறைந்தாலும் 2,000 கோடி ரூபாய் வரை மாநிலத்தின் வருவாய் சரியும்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 4 சதவீதம் புள்ளிகளைக் குறைத்ததால் மாநிலத்தின் மக்களுக்கு மிகப் பெரிய பயனை அளிக்கும் என்றும் வசுந்தரா ராஜே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் ரூபாய் மதிப்புச் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை உயர்வது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையும் உயர வாய்ப்புகள் உள்ளது. காங்கிரஸ் கட்ச்சி நாடு முழுவதும் திங்கட்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கண்டித்து வேலை நிறுத்ததிற்கு அழைப்பினை விடுத்துள்ளது.

Advertisement

ராஜஸ்தான் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் வசுந்தரா ராஜேவின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்குப் பெறும் இழப்பே ஆகும்.

தங்களது மாநில மக்களுக்காக ராஜஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையைக் குறைத்ததைப் போன்று தமிழ் நாட்டில் எடப்பாடி அரசும் செய்யுமா என்றும் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

English Summary

Like Rajasthan cuts VAT on petrol, diesel by 4 percentage points Tamil Nadu Will Do or Not?
Advertisement