ரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற விடும் ஏர்டெல்!

வோடபோன்- ஐடியா தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணைப்புக்குப் பின் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்க, சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் 399 ரூபாய் மதிப்பிலான போஸ்ட் பெய்டு திட்டத்தில் தள்ளுபடியும், அதிரடி சலுகைகளையும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த ஏர்டெல் நிறுவனம், வோடபோன்-ஐடியா இணைப்பால் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இந்தப் போட்டியை முறிடியக்க ஏர்டெல் நிறுவனம் சலுகைகளை அறிவிக்க முடிவு செய்துள்ளது.

கட்டணம் குறைப்பு

399 மதிப்பிலான மைபிளான் இன்பினிடி திட்டத்தில் 50 ரூபாய் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இந்தச் சலுகை மூலம் 399 மதிப்பிலான திட்டம் 349 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆறுமாதங்களுக்குப் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் 300 ரூபாய் தள்ளுபடி பெற முடியும்

போட்டி

வோடபோன் நிறுவனத்தின் ரெட்போஸ்ட் பெயிட் திட்டம் 299 ரூபாயில் தொடங்குகிறது. ஏர்டெல் அறிவித்துள்ள இந்தப் புதிய தள்ளுபடிகள் வோடபோன் நிறுவனத்தின் சலுகைகளுக்குச் சவால் விடுத்துள்ளது.

டேட்டா சலுகை

புதிய திட்டத்தின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பயன்படுத்தப்படாத எஞ்சியுள்ள டேட்டாக்களை அடுத்த மாதத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 20 ஜி.பி டேட்டாக்களை 12 மாதங்களுக்கு வழங்கவும் இந்தத் திட்டத்தில் வழிசெய்யப்பட்டுள்ளது.

இலவச சந்தா

மாதம் 40 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற அழைப்புகளையும், நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுந்தகவல்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் டிவி சந்தா மற்றும் விங்க் மியூசிக் சேவைகளும் இலவசமாகக் கிடைக்கிறது.

டிராய் தகவல்

வோடபோன்-ஐடியா இணைப்புக்குப் பிறகு சந்தாதார்களின் எண்ணிக்கை 400 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதுதவிரப் பங்குச் சந்தை வருவாய் ஆகியவற்றில் வோடபோன் நிறுவனம், ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளியது.அதேநேரம் டிராய் வெளியிட்ட மதிப்பீட்டின்படி ஜூன் மாதத்தில் ஏர்டெல் 344.56 சதவீத வாடிக்கையாளர்களுடன் முன்னிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது. வோடபோன் இரண்டாவது இடத்திலும், ஐடியா, ஜியோ அடுத்தடுத்து இடங்களையும் பிடித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Airtel offers Rs 300 discount on Rs 399 postpaid plan