கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.20% வரை உயர்த்தி எச்டிஎப்சி அதிரடி..!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எச்டிஎப்சி அதன் கடன் திட்டங்கள் மீதான வட்டி வீதங்களை 0.20 சதவீதம் வரை உயர்த்தியது. இதனால் நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் அடிப்படை செலவு எனப்படும் MCLR விகிதம் ஒரு வருட கடன் திட்டங்களுக்கு 8.6 சதவீதமாகவும், பிற கால அளவிலான கடன்களுக்கு 8.25 முதல் 8.9 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

இதனால் வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன் போன்ற திட்டங்களின் வட்டி விகிதம் எல்லாம் உயரும் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ரூபாய் மதிப்புச் சரிவு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றில் ஏற்கனவே மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் வங்கி நிறுவனங்களும் தங்கள் பங்கிற்குக் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறன.

எச்டிஎப்சி வங்கிக்கு முன்னதாகப் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆ பரோடா உள்ளிட்டவை கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.

எஸ்பிஐ

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை 0.20 சதவீதம் உயர்த்தி 8.45 சதவீதமாகச் சில வாரங்களுக்கு முன் அறிவித்தது.

ஐசிஐசிஐ வங்கி

இதே போன்று ஐசிஐசிஐ வங்கி நிறுவனமும் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை 0.15 சதவீதம் உயர்த்தி 8.55 சதவீதமாக அறிவித்துள்ளது.

வாரா கடன்

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தி ஒரு மாதங்கள் ஆன பிறகு இந்திய வங்கி நிறுவனங்கள் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை அதிகரித்து இருப்பதற்கு வாரா கடன் உள்ளிட்டவையும் ஒரு காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர வாய்ப்பு

1 ஆண்டு அரசு பத்திர திட்டங்கள் மீதான லாபம் 8% இலக்கை கடந்த நிலையில் ஆர்பிஐ மீண்டும் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

HDFC Bank Hikes MCLR Rates: Your Loan May Cost More