ரூ. 57 கோடி முதலீட்டில் ஜெனிசிஸ் ஆடை நிறுவனத்தைக் கைப்பற்றிய முகேஷ் அம்பானி.. ஏன்?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான ஆர்.ஆர்.வி.எல், ஜெனிசிஸ் கலர்ஸ் ஆயத்த ஆடை நிறுவனத்தின் 16.31 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 34.80 கோடி ரூபாய் ஆகும்.

ஏற்கனவே ஜெனிசிஸ் கலர்ஸ் நிறுவனத்தின் 49.46 விழுக்காடு பங்குகளை ரிலையன்ஸ நிறுவனம் வாங்கி இருக்கிறது.

மதிப்பு உயர்வு

ரிலையன்ஸ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஜெனிசிஸ் ஆயத்த ஆடை நிறுவனத்தின் 16.31 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் பங்கு மதிப்பை 65.77 ஆக உயர்த்தியுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள்

ஆயத்த ஆடைகள், காலணிகள் மற்றும் அணிகலன்களை விற்பனை செய்யும் 5 நிறுவனங்களை 57.03 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் வாங்கி இருக்கிறது. ஜி.எல்.எப் லைப் ஸ்டைல் நிறுவனத்தின் 50 விழுக்காடு பங்குகளை 38.45 கோடி ரூபாய்க்கும், ஜெனிசிஸ் லா மோடு நிறுவனத்தின் பங்கை 10.57 கோடிக்கு வாங்கியது. ஜெனிசிஸ் லக்சரி பேஷன், ஜி.எம்.எல் இந்தியா பேஷன் மற்றும் ஜி.எல்.பி பாடி கேர் ஆகிய நிறுவனங்களையும் ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ளது.

ரிலையன்ஸின் திட்டம்

நிறுவனங்களை வளைத்துப் போடுவதன் சில்லறை வர்த்தகத்தை வலுவாக்க ரிலையன்ஸ திட்டமிட்டுள்ளது. இதனால் சில்லறை வர்த்தக நிறுவனங்களிடையே போட்டியிடுவதற்குரிய மதிப்பு உருவாகும் எனக் கருதுகிறது.

அனுமதி தேவையில்லை

இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்குச் செபியின் அனுமதி தேவையில்லை என்று தெரிவித்துள்ள ரிலையன்ஸ, குழும நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்காது என்று கூறியுள்ளது.

வருவாய் வீழ்ச்சி

1998 இல்லை தொடங்கப்பட்ட ஜெனிஸிஸ் கலர்ஸ் நிறுவனம், காலணிகள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றைத் தன் கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து விற்பனை செய்து வந்தது.2017-18 ஆம் ஆண்டில் 86 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.2015-16 இல் 114 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.

Have a great day!
Read more...

English Summary

Reliance Retail buys 16.31 percent in Genesis Colors, acquires stake in 5 more companies