வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு.. சென்செக்ஸூம் 400 புள்ளிகளை இழந்தது, தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 72 பைசா சரிந்து 72.46 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ரூபாய் மதிப்புச் சரிவு மட்டும் இல்லாமல் இன்று இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸும் கிட்டத்தட்ட 400 புள்ளிகள் வரை சரிந்துள்ள நிலையில் இதற்காகக் காரணங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

மூடிஸ்

ரூபாய் மதிப்பு ஒரு பக்கம் சரிந்து வருவது சில நிறுவனங்களின் வருவாய் அதிகரித்தாலும் அவர்கள் பெற்ற கடன் டாலரில் இருக்கும் போது அதுவும் பெரிய பயனில்லை என்று மூடிஸ் கூறியுள்ளது.

பங்கு சந்தை

பிற்பகல் 12:30 மணியளவில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 377301 புள்ளிகள் என 0.98 சதவீதம் சரிந்து 38,012.87 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 122.65 புள்ளிகள் எஅ 11,466.45 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

டாலர்

அமெரிக்க டாலரின் வலுவான நிலையால் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. இப்படியே சென்றால் ரூபாய் மதிப்பு வரும் மாதங்களில் 100 ரூபாயினைத் தொடும் என்ற அச்சமும் உள்ளது.

ஐடி துறை

ரூபாய் மதிப்பு சரியும் போது ஐடி நிறுவனங்கள் மிகப் பெரிய பயன் அடையும். அந்த வகையில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் டிசிஎஸ் உள்ளது.

பத்திர வருவாய்

2014-ம் ஆண்டுக்குப் பிறகு 10 வருட அரசு பத்திர திட்டங்கள் வருவாய் 8.12 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் தான் சில வங்கி பங்குகள் சரிவைச் சந்தித்து வருகிறன.

ஆர்பிஐ

ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் ஒரு பக்கம் உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆர்பிஐ இதில் தலையிட்டு சரிவைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் & டீசல் விலை நிலவரம்

ரூபாய் மதிப்பு சரிவால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 83.91 ரூபாய் என்றும், டீசல் விலை 76.98 ரூபாய் என்றும் அதிகரித்துள்ளது.

பணவீக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதம் முதல் விவசாயப் பொருட்களுக்கு அளிக்கப்பட உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையாலும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Rupee Hits Lifetime Low Of 72.46 To the Dollar: 7 Things To Know