11 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டும் சம்பளம் அளித்த இன்போசிஸ்!

பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனத்திற்கு அமெரிக்காவின் ரகோ தீவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த முன்னால் ஊழியரான அனுஜ் கபூர் நிறுவனத்தின் மூது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில் இன்போன்சிஸ் நிறுவனம் தன்னை ஒவர் டைம் என்ற பெயரில் கூடுதல் மணிநேரம் வேலை வாங்கியது மட்டும் இல்லாமல் அதற்கான சம்பளத்தினை வழங்கவில்லை என்றும் தான் 1,000 மணிநேரங்கள் வரை கூடுதலாகப் பணிபுரிந்துள்ளதாகவும் அனுஜ் கபூர் குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டல்

அனூஜ் கபூர் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பணிபுரிய மறுத்த போத தனது மூத்த அதிகாரிகள் தன்னைத் திருப்பி இந்தியாவிற்கே அனுப்பிவிடுவோம் என்று மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் வாடிக்கையாளருக்குப் பிற மென்பொருள் சேவை அளிக்கும் நிறுவனத்தினை வெளியேற்றக் கூடுதலாகச் செய்யப்படும் வேலைக்கான ரசீதுகள் அனுப்பப்படுவதிலை என்று தனது மூத்த அதிகாரிகள் கூறியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எச்-1பி விசா

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மென்பொருள் அவுட்சோர்சிங் நிறுவனமான இன்போசிஸ் அனுஜ் கபூர் எச்-1பி விசா விதிகளின் படி ‘மணிநேர தொழிலாளி' ஆனால் நாங்கள் அவரை மாத சம்பள ஊழியராகத் தான் கவனித்து வந்தோம் என்று இது குறித்துக் கூறியுள்ளது.

முதல் முறை அல்ல

இன்ப்சோஸிஸ் நிறுவனம் இது போன்ற புகாரில் சிக்குவது இது ஒன்றும் முதன் முறை அல்ல. 2018-ம் ஆண்டு இதே போன்ற ஒரு புகாரில் காலிபோரினியா நீதிமன்றத்தில் 26 மில்லியன் டாலரினை அபராதமாகவும் செலுத்தியுள்ளது.

இன்போசிஸ் மறுப்பு

அனுஜ் கபூர் அளித்துள்ள புகார்களை மறுத்துள்ள இன்போசிஸ் நிறுவனம் இதனைச் சட்ட சீதியாக நாங்கள் சந்திப்போம் என்றும், அமெரிக்கச் சட்ட விதிகளை நாங்கள் முறையாகக் கடைப்பிடித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளது.

பங்கு சந்தை

இன்றைய சந்தை நேர முடிவில் இன்போசிஸ் பங்குகள் 2.30 புள்ளிகள் என 0.31 சதவீதம் உயர்ந்து 734.25 புள்ளி எனப் பிளாட்டாக முடிவடைந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Infosys Former employee files lawsuit against for 'not paying overtime'