‘ஜன் தன்’ சேமிப்புக் கணக்குகளில் மீண்டும் புதிய மாற்றம்.. இது பொருளாதாரத்தை ஊக்குவிக்குமா?

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்த ஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்குகளில் உள்ள ஓவர் டிராப்ட் வசதி கீழ் கடன் பெறும் வரம்பை சென்ற வாரம் 5000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்திய நிலையில் மீண்டும் புதிய மாற்றத்தினை அறிமுகம் செய்துள்ளனர்.

இதன் கீழ் ஜன் தன் சேமிப்புக் கணக்குகளுக்கு 2,000 ரூபாய் வரை நிபந்தனை ஏதுமின்றி ஓவர் டிராப்ட் அளிக்கப்படும் என்றும் இதற்காக 32,000 கோடி ரூபாய் செலவு செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாகவும், இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கக் கூடிய ஒரு திட்டம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஜன் தன் யோஜனா கணக்குகளுக்கு அளிக்கப்படும் இந்தச் சேவையினைக் காய்கறி விற்பனையாளர்கள், சிறு வணிர்கள் எல்லாம் பெற்று அதிகளவில் பயன்பெறுவார்கள். இது போன்ற சிறு கடன்களை ஜன் தன் வங்கி கணக்கில் பெற்று அவர்கள் திரும்பச் செலுத்துவதன் மூலம் பின்னர் அதிக மதிப்புடைய கடன்களைப் பெற முடியும்.

அன்மை தரவுகளின் படி 32 லட்சம் பிர்தான் மந்திரி ஜன் தன் யோஜனா கனக்குப் பயனர்கள் 2017 டிசம்பர் மாதம் வரை 354 கோடி ரூபாயினை ஓவர் டிராப்ட்டாகப் பெற்றுள்ளனர். தற்போது ஜன் தன் வங்கி கணக்கை துவங்கிய 6 மாதங்களுக்குப் பிறகே அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சில விதிமுறைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதிகக் கடனை அளிக்க முடியும்.

இது வங்கி கணக்கு மூலம் கடன் பெறுவதை ஊக்குவிக்கும். அதே நேரம் அதிகளவில் வாரா கடனாக மாறும் சிக்கலும் உள்ளது. தேர்தல் வரும் நேரம் என்பதால் சிலர் இது இலவசம் என்றும் பணத்தினை எடுத்துப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் ஜன் தன் செமிப்புக் கணக்குகளில் ஓவர் டிராப்ட் மூலம் கடன் பெற்று பயன் படுத்தும் போது 12 முதல் 20 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும்.

Have a great day!
Read more...

English Summary

New Upadates In Jan Dhan Yojana Savings Account To Boost Economy