டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 15 பைசா உயர்ந்து.. பங்கு சந்தை சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை 15 பைசா உயர்ந்து 72.29 பைசாவாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 93 பைசா சரிந்து 72.67 ரூபாயினை தொட்டது.

Advertisement

ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் டாலரினை விற்பது அதிகமாகியிருப்பது, டாலரின் மதிப்பு சில நாணயங்களுக்கு எதிராகச் சரிந்து இருப்பது போன்றவை ரூபாய்க்கு ஆதரவாக இருப்பதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

Advertisement

10 வருட அரசு பத்திர திட்டங்கள் மீதான வருவாயும் 8.12 சதவீதத்திற்கும் அதிகமாகியுள்ளது. மீண்டும் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தினை உயர்த்த வாய்ப்புள்ளதாக வந்த செய்திகள் போன்றவை ரூபாய் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது.

பங்கு சந்தை காலை சரிவுடன் துவங்கியுள்ளது. காலை 10:20 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 38.69 புள்ளிகள் என 0.10 சதவிதம் சரிந்து 37,891.84 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 4 புள்ளிகள் என 0.04 சதவீதம் சரிந்து 11,433.95 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

ஆசிய நாணயங்களில் இந்திய ரூபாய் மதிப்பு மிக மோசமான நிலையில் சரிந்ததாக கூறப்படும் நிலையில் அது இல்லை என்றும் இந்தோனேசியா தான் அதிகளவில் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

English Summary

Rupee recovers 15 paise higher at 72.30 per US dollar. Stock Market Falls In Tamil
Advertisement