எத்தனால் விலையை 25% உயர்த்த மத்திய அமைச்சகம் அனுமதி.. பெட்ரோல் விலை மேலும் உயருமா?

மத்திய அமைச்சகம் இன்று எத்தனா மீதான விலையை 25 சதவீதம் வரை உயர்த்த அனுமதி அளித்துள்ளது. இதனால் சர்க்கரை ஆலைகள் அதிகளவில் எத்தனாலினை உற்பத்தி செய்ய வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் அதிகளவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் உலகளவில் நம்பர் 1 இடத்தினையும் பிடிக்க உள்ளது. அதே நேரம் இந்தியாவில் சர்க்கரை விலை மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளதால் கரும்பு விவசாயிகள் பாதிப்படைந்தனர்.

அதனை ஈடுகட்ட மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தியுள்ளது. அன்மையில் எத்தனால் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைத்த மத்திய அரசு தற்போது விலை உயர்த்தியுள்ளது.

இதனால் பெட்ரோலிய பொருட்களுடன் எத்தனாலை கலந்து எரிபொருள் விலையைக் குறைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவால் ஏற்கவே விண்ணைத்தொட்டு இருக்கும் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரவும் வாய்ப்புள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Cabinet Approves Hike In Ethanol Price By 25%. Sugar Industry To Benefit