ஜியோவின் அதிரடி சலுகை.. 100 ரூபாய்க்கு ஒரு மாதம் இணையதளம் மற்றும் குரல் அழைப்புகள்!

முகேஷ் அம்பானியின ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2 ஆண்டினை நிறைவு செய்துள்ள நிலையில் அதனை வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவாகியுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்குப் பல வகையான சலுகைகளை அளிக்க உள்ளது.

சென்ற வாரம் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கூடுதலாக 16 ஜிபி தரவை அளித்தது. தற்போது மேலும் புதிய சலுகைகளை வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் அறிவித்துள்ளது.

100 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்

பிளிப்கார்ட்டின் துணை நிறுவனமான போன்பேவுடன் இணைந்து மை ஜியோ செயலியில் 100 ரூபாய் டிஸ்கவுண்ட் ரீசார்ஜ் சலுகை ஒன்றை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

299 ரூபாய் திட்டம்

ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகளவில் 399 ரூபாய் பேக்கினையே ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்திற்குத் தினமும் 1.5 ஜிபி அதிவேக தரவு மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பினை அளித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாகப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பகின்றனர். தற்போது இன்ஸ்டண்ட் சலுகையாக இந்த ரீசார்ஜ் திட்டத்திற்கு 100 ரூபாயினை அளித்துள்ளதால் 299 ரூபாய்ச் செலுத்தினால் போதுமெனத் தெரிவித்துள்ளனர்.

100 ரூபாய் இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட் எப்படி?

50 ரூபாய் இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட்டும், ஜியோ மனி செயலியில் 50 ரூபாய் கேஷ்பேக்காகவும் வழங்கப்படுகிறது. 50 ரூபாய் இன்ஸ்டண்ட் கேஷ் பேக் மை ஜியோ செயலியில் போன்பே மூலம் பணம் செலுத்தும் போது மட்டுமே கிடைக்கும்.

சலுகை காலம்

ஜியோ வழங்கும் இந்த இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட் சலுகை 2018 செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 21 வரையில் மட்டுமே கிடைக்கும்.

டெய்ரி மில்க் சாக்லேட் சலுகை

டெயிரி மில்க் சாக்லேட்டில் வழங்கப்படும் கூடுதல் தரவு சலுகையானது 2018 செப்டம்பர் 30 வரையில் மட்டுமே கிடைக்கும். இதற்கு டெயிரி மிக் சாக்லேட் ரேப்பரில் உள்ள பார்கோடினை ஸ்கான் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Jio offers free calling, unlimited data at Rs 100 per month. Here is how to get?