அடேங்கப்பா..! ஒரு விநாயகர் சிலைக்கு 68 கிலோ தங்கம், 327 கிலோ வெள்ளி.. 265 கோடி ரூபாய்க்கு காப்பீடா!

விநாயகர் சதுர்த்தித் தென் இந்தியாவை விட வட இந்தியாவில் மிகவும் கோலகலமாகக் கொண்டாடுவர்கல். அதிலும் எங்கு மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டது என்ற போட்டியும் நிலவும்

இப்படி இந்த ஆண்டு மும்பையில் மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை ஒன்று சரஸ்வத் பிராமின் கணேஷ் மண்டல் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விநாயகர் சிலைக்கு 264.75 கோடி ரூபாக்கு காப்பீடு பெற்றுள்ளனர்.

இந்த விநாயகர் சிலைக்கு என்ன சிறப்பு?

சரஸ்வத் பிராமின் கணேஷ் மண்டல் அமைத்துள்ள இந்த விலை உயர்ந்த விநாயகர் சிலையை 14.5 அடி உயரத்தில் 68 கிலோ தங்கம் மற்றும் 327 கிலோ வெள்ளி மற்றும் வரை நகைகளை எல்லாம் பயன்படுத்தி அலங்காரம் செய்து வடிவமைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வத் பிராமின் கணேஷ் மண்டல் சிலை இப்படி மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்படுவது வழக்கம்.

காப்பீடு

விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த விலை உயர்ந்த சிலையுடனான கொண்டாட்டத்தினைச் சிறப்பிக்க ஒரு நாளைக்கு 52.85 கோடி ரூபாய்க்குக் காப்பீடு செய்துள்ளனர்.

யாருக்கெல்லாம் இந்தக் காப்பீடு கிடைக்கும்?

விலை உயர்ந்த விநாயகர், தரிசிக்க வரும் பக்தர்கள், ஆபரணங்கள் ,விபத்து, தீவிரவாதம், தீ போன்ற எதிர்பாரா விபத்துகள் நடைபெறும் போது காப்பீடு பெறக்கூடிய பாலிசியாக இது அமைந்திருக்கிறது.

விபத்து நிகழும் போது தனிநபர் விபத்துகளுக்கு ரூ. 224.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொண்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்படத் தனி நபர் ஒருவருக்கு ரூ. 10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். சிசிடிவி, தளபாடங்கள் மற்றும் சாதனங்கள், மளிகை, பழங்கள், காய்கறிகள் மற்றும் கணினிகள், தீ, இயற்கைப் பேரழிவுகள், கலவரங்கள், வேலைநிறுத்தம், இரயில் அல்லது சாலை சேதங்கள், மின்சாரம், பூகம்பங்கள் ஆகியவற்றால் பாதிப்படையும் போது இந்தக் காப்பீடு இழப்பினை அளிக்கும்.

 

இந்தக் காப்பீட்டிற்கான கால அளவு எவ்வளவு?

விநாயகர் சதுர்த்தி நாள் முதல் சிலைக்குச் சாத்தப்பட்டுள்ள நகைகள் எல்லாம் வங்கி லாக்கரில் மீண்டு பாதுகாப்பாக டெபாசிட் செய்யப்படும் வரை இந்தக் காப்பிடு கவர் செய்யும்.

பிற விநாயகர் சிலை விலை நிலவரம்

மகாராஷ்டிரா முழுவதும் இந்த ஆண்டு 3 லட்சத்திற்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை அமைக்க உள்ளனர் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றனர். இவ்வற்றில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டவை 5 லட்சம் முதல் 50 லட்சம் லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகள் ஆகும்.

Have a great day!
Read more...

English Summary

Mumbai's Expensive Ganesh Idol With 68 kg gold and 327 kg silver. Event insured for Rs 265 crore