சில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாகக் குறைந்தது!

ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 10 மாத குறைவு என 6.69 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன. இதுவே ஜூலை மாதம் சில்லறை பணவீக்கம் 4.17 சதவீதமாக இருந்தது.

சில்லறை பணவீக்கம் 10 மாத குறைவை சந்தித்தது இதுவே முதல் முறையாகும். அது மட்டும் இல்லாமல் இந்திய ரிசர்வ் வங்கியின் மிட்-டெர்ம் இலக்கான 4 சதவீதத்திற்குள் சில்லறை பணவீக்கம் உள்ளது.

காய்கறி விலை 7 சதவீதம் வரை ஆகஸ்ட் மாதம் சரிந்துள்ளது. ஜூலை மாதம் பழங்கள் மீதான விலை 7 சதவீதமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 3.57 சதவீதமாக உள்ளது. அதே நேரம் பெட்ரோல், டீஅல் மீதான பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் 8 சதவீதமாக இருந்த பெட்ரோல் டீசல் மீதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 8.47 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஜூலை மாதம் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் 6.6 சதவீதமாகச் சரிந்தது. இதுவே ஜூன் மாதம் 7 சதவீதமாக இருந்தது.

உற்பத்தித் துறையினைப் பொறுத்தவரையில் 23 குழுவில் 22 ஜூலை மாதம் வளர்ச்சியினைப் பெற்று இருந்தன.

Have a great day!
Read more...

English Summary

Retail inflation dips to 3.69% in August