பெட்ரோல் விலை குறைப்பு: ராஜஸ்தான் செய்ததே.. தமிழகத்தில்?... வாய்ப்பே இல்லை ராஜா!!

ஜூன் 2017ல் இருந்து தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் அமலாக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 2014-ல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.70.87. இப்போதோ ரூ. 84.05. இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கடந்த திங்கட்கிழமை பாரத் பந்தும் நடத்தப்பட்டது.

ராஜஸ்தான் செய்ததே

சில தினங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம், பெட்ரோல் டீசல் மீதான மாநில வாட் வரியை நான்கு சதவிகிதம் குறைத்துக் கொண்டு, மக்களுக்கு 2.5 ரூபாய் எரிபொருளின் விலையைக் குறைத்துக் கொடுத்திருக்கிறது.

தமிழகம் செய்யுமா?

ராஜஸ்தானைப் போல, தமிழகம் செய்யுமா என்றால், "வாய்ப்பே இல்ல ராஜா" தான். அரசியல் சூழ்நிலைகளைத் தவிர்த்து, நிதி நிலைமை ரீதியாகப் பார்த்தால் கூட தமிழகத்துக்கு பலத்த அடி விழும்.

தமிழகத்தின் நிதி நிலை

இந்திய மாநிலங்களிலேயே மூன்றாவது பெரிய நிதிப் பற்றாக்குறை மாநிலம் தமிழகம். இதை ஆங்கிலத்தில் Fiscal Deficit என்பார்கள். தமிழகத்தின் 2017 - 18 நிதியாண்டுக்கான Fiscal Deficit 40,530 கோடி ரூபாய். அதாவது தமிழகத்துக்கு வரும் வருமானத்தை விட 40,530 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவு செய்கிறது. 2018 - 19 நிதியாண்டுக்கு Fiscal Deficit 44,481 கோடியாக இருக்கும் என தமிழக அரசு தன் பட்ஜெட்டில் குறிப்பிட்டிருக்கிறது. எனவே தமிழகத்தின் பொறுப்பில் இருக்கும் வாட் வரியை குறைத்துக் கொள்ள முன் வராது.

சரிகட்டவே முடியாதா?

தமிகழத்தை விடுங்கள், இந்த பெட்ரோல், டீசல் விலை எல்லாம் மத்திய அரசு தானே நிர்ணயிக்கிறது. மத்திய அரசு குறைக்கலாமே என்று கோவப்பட்டால் கூட "குறைக்க முடியாது" என்றே மத்திய அரசு வட்டாரங்கள் சொல்கின்றன. ஏன்...? பெட்ரோல், டீசல் லிட்டர் ஒன்றுகு ஒரு ரூபாய் வரி குறைத்துக் கொண்டால் கூட ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். சரிங்க எவ்வளவோ செலவளிக்கிறோம், இந்த 30,000 கோடி ரூபாயை மட்டும் ஏதாவது ஒரு கணக்குல எழுத முடியாதா என்றால் மீண்டும் முடியாது என்று தான் வருகிறது. ஏன்...?

இந்தியாவின் இறக்குமதி

இந்தியா, கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு. பிப்ரவரி 2016-ல் சுமாராக 30 டாலருக்கு (பேரல் ஒன்றுக்கு) கிடைத்துக் கொண்டிருந்த Brent crude oil, தற்போது 70 டாலருக்கு வாங்க வேண்டி இருக்கிறது.

டாலர் Vs ரூபாய்

இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு டாலரில் தான் பணம் செலுத்த வேண்டும். ஒரு நாட்டிடம் எவ்வளவு டாலர் கையிருப்பு இருக்கிறதோ அதைத் தான் நாம் அந்நிய செலவானி என்று சொல்கிறோம். அதைத் தான் ஆங்கிலத்தில் CAD - Current Account Deficit என்று சொல்கிறோம். பிஜேபி ஆட்சிக்கு வந்த போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமாராக 58 ரூபாய் தான். அதாவது அன்று 58 ரூபாய் கொடுத்தால் ஒரு டாலர் வாங்கி விடலாம். ஆனால் இன்று 72.5 ரூபாய் கொடுத்தால் தான் ஒரு டாலர் வாங்க முடியும்.

இந்திய நிதிப் பற்றாக்குறை

மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகள் நிதிப் பற்றாகுறையில் தான் நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே எந்த அரசும் மானியங்களை எல்லாம் வழங்க முன் வராது அல்லது தங்கள் வரி வருவாயைக் குறைத்துக் கொள்ளாது.

எண்ணெய் நிறுவனங்களின் லாபம்

இறக்குமதி செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டியே ஆக வேண்டும், ஆகையால் அவர்கள் இந்த விலையை அப்படியே மக்களிடம் கடத்தி விடுவார்கள். மக்கள் தான் இந்த விலையை தாங்கிக் கொள்ள வேண்டும் என முடித்தார்.

Have a great day!
Read more...

English Summary

ஜூன் 2017ல் இருந்து தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் அமலாக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 2014-ல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.70.87. இப்போதோ ரூ. 84.05. இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கடந்த திங்கட்கிழமை பாரத் பந்தும் நடத்தப்பட்டது.